பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 77 தொல்காப்பியர் கூறும் பூவை நிலையின் இயல்பு அது வாகவும், அரசர்களை அமரர்களாக ஆக்கிப் பாடுவதையே அவரும் குறிப்பிடுகின்றார் எனப் பிறழ உணர்ந்தமையால், "மாயோனொடு பொருந்திய நிலைபெற்ற பெரும் சிறப்பு உடைமையால் கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவை நிலை” என இயல்பாகப் பொருள் தரத் தக்கதாகிய "மாயோன் மேய் மன்பெரும் சிறப்பின் தாவா விழுப்புகழ் பூவை நிலையும்" (தொல், புறம்: 5 என்ற அவர் தொடரை "மாயோன் விழுப்புகழ் மேய பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ்-மன் பூவைநிலையும்” எனக் கண்ணழித்து "மாயனுடைய காத்தற் புகழையும், ஏனோர்க்கும் உரிய வாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தல் என்னும் புகழ்களையும், மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவை நிலையும்" எனத் தமக்கு வேண்டியவாறெல்லாம் பொருள் கொள்ளும் நச்சினார்க் கினியர் உரை, உண்மையுரை அன்று. பூவை நிலைத் துறை தன் தொல்லியல்பு இழந்து, அரசர்களை அமரர்களாக ஆக்கிப் பாராட்டுவதைக் குறிக்கும் நிலைபெறவே, அவ்வியல்பு அரசர்களின் புகழ் பாடுவதால் பு.வெ. மாலையார் அதை, மன்னர்பால் காணலாம் பல்வேறு மாண்புகளையும் பாராட்டிப் பாடுவதே பொருளாக வரும்பாடாண் படலத்துள் வைத்து விளக்கியுள்ளார். "பூவை விரியும் புதுமலரில், பூங்கழலோய்! யாவை விழுமியம்? யாம்.உணரேம்-மேவார் மறத்தொடு மல்லர் மறம்கடந்த காளை நிறத்தொடு நேர்தருத லான். பு.வெ.மா. 92