பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 嫩 புலவர் கா. கோவிந்தன் தம் உடைமைகளையும் காக்கவல்ல காவலன் அவனே ஆவன் என அவனுக்கு ஆட்சித் தலைமை அளித்துச் சிறப்பித்தனர். ஆகவே, அதைக் கூறும், "வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து, பறை துரங்க நாடு அவனுக்கு அருளிய "பிள்ளையாட்டு” என்ற துறையினைக் கரந்தைத் துறைகளுள் ஒன்றாகக் கோத்துள்ளார் ஆசிரியர் தொல் காப்பியனார். அரசனைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் 'கோன்” என்னும் குறியீடு நனிமிகப் பழமையுடைய தாதலும், தமிழ் நாட்டு முதுபெரும் வேந்தர்க்குடிகளாம் மூவேந்தர் குடிகளுள் ஒன்றாகிய பாண்டியர் குடி, ஆயர் குடியோடு உறவுடையதாம்-"மலிதிரையூர்ந்து தன் மண் கடல் வெளவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கெண்டை, வலியினான் வணங்கிய வாடாச் சீர்த் தென்னவன். தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய, நல்லினத்து ஆயர்" (முல்லைக்கலி, 4) எனக் கூறப்பெறுதலும், ஆயர், இன்றும் கோனார் என அழைக்கப் பெறுதலும், மக்கள் உடைமைகளைக் காக்க வந்த மக்கட்டலைவனே பண்டு மன்னவனாக்கப் பெற்றான் என்ற உண்மை உலகியலாதலும், மக்களின் உடைமைகளாகப் பண்டு கருதப்பட்டன ஆனிரைச் செல்வங்களே யாதலும், பகைவென்ற நிரைமீட்டுத் தந்தானுக்கு அரச உரிமை அளித்துச் சிறப்பிக்கும் துறைக்கு அரண் செய்கின்றன. அரசர் இடம் பெறாத அக்காலத்துக் கரந்தை நிகழ்ச்சிகளையே, ஆசிரியர் தொல்காப்பியனார் கூறு வதால், வென்ற வீரனை வேந்தனாக்கும் நிகழ்ச்சியை விளக்கினார்; ஆனால், பு:வெ. மாலையார் மக்கள் தலைவனாக மன்னவன் வந்துற்ற பிற்காலத்தியக் கரந்தை