பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 93

இக்கால நிலைக்கேற்ப பொது நிறுவனத்திற்கு நாட்டின் நலன்விளையும் என்று கருதியோ கொடுப்பதும் சிறந்த கொடையாகும். இத்தகைய கொடை தானாக ஒருவரின் உள்ளுணர்வால் ஏற்படுவதாக இருப்பின் அதுவும் சிறந்த கொடையாகக் கருதப்பெறும் . ஈவதில் ஒரு தனி இன்பம் உண்டு. இந்த இன்பம் குழந்தைகட்கும் தெரியும், அதனால் குழந்தைகள் சிலசமயங்களில் தம்மிடம் உள்ளவற்றைப் பிறருக்குக் கொடுப்பதை ஒரு விளையாட்டாகக் கொடுத்து மகிழும். வள்ளல் அழகப்பர் குழந்தை மனம் படைத்தவர். ஈத்துவக்கும் இன்பம் கண்டவர். பத்தாண்டுகட்கு மேல் (1950-60) அவர் நிறுவிய கல்லூரி ஒன்றில் பணியாற்றிய நான் இதனை நேரில் கண்டு மகிழ்ந்தவன். மின்சார வேதியியல் ஆய்வு நிறுவனத்தைக் காரைக்குடியில் தொடங்குவதற்கு பதினைந்து இலட்சம் வெண் பொற்காசுகளும் நூறு ஏக்கர் நிலமும் விழா வொன்றில் வழங்கியபோது அவர் முகத்தில் ஈத்துவக்கும் இன்பம் ஒளிரக் கண்டேன். இப்படி அவர் வாழ்வில் பல சந்தர்ப்பங்களை நேரில் கண்டு மகிழ வாய்ப்புகள் பெற்றவன் அடியேன்.

வள்ளல் ஏ.வி.மெய்யப்பச்செட்டியாரும் அவர் குடும்பமும் இத்தகைய பண்பு அமையப் பெற்றவர்கள். புலவர்களைப் போற்றும் புரவலர்களில் சிறந்தவர்கள், இந்த இராஜேசுவரி திருமணமண்டபத்தை பல்வேறு பொது நிகழ்ச்சிகட்கு இலவசமாக வழங்கி வருவதைத் தமிழகம் நன்கு அறியும். அறநெறி உணர்ந்தவர்கள் ஈயாமல் வாழ முடியாது.

இனி கம்பன் காவியத்தில் ஈகை பற்றி வரும் இடங்களைக் காண்போம். நாட்டு வளத்தைக் கூறும்

கவிஞன்,