பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் ல் 95

கை தாழ்ந்திருப்பதால் எனக்குத்தானே பெருமை ' என்கின்றான்.

மேலும் கூறுவான்:

வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர் வள்ளிய ராக வழங்குவ தல்லால் எள்ளுவ என்?சில இன்னுயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்’ என்பது காண்க. இதில்,

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222) என்ற குறளின் கருத்து ஈண்டு வந்துள்ளதைக் கண்டு மகிழலாம். தொடர்ந்து,

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்:கண் மாயாது ஏந்திய கைக்கொடு இரந்தவர் எந்தாய் வீந்தவர் என்பவர் வீந்தவ ரேனும் ஈந்தவர் அல்லர் இருந்தவர் தர்மே” (வீந்தவர் - இறந்தவர்) என்று கூறுவான். இரந்து உயிர் வாழ்வார் உயிரோடிருப் பினும் இறந்தவர்களே சந்து வாழ்ந்தவர் உயிர் இறப்பினும் உயிரோடு இருப்பவர்களே என்ற கருத்தை இதில் காணலாம்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தார் தம்புகழ் நிரீஇத் தாம்மாய்ந் தனரே

என்ற கருத்து ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

58. பாலகா. வேள்வி - 29 59. மேற்படி - 30 60. புறம் - 165