பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் , 135

அயோத்திக்குத் திரும் புகையில் வழியில் કલ્પ; அபசகுனங்களைக் காண்கின்றான். இதனைக் கம்பநாடன்,

ஏகும்.அள வையின்வந்தன

வலமும்மயி லிடமும் காகம்முத லியமுந்திய

தடைசெய்வன கண்டான் நாகம்அனன் இடையிங்குள

திடையூறென நட்வான்'

என்று குறிப்பிடுவான் தசரதன் வரும் வழியில் மயில் முதலிய பறவைகள் நல்ல சகுனமாக வலப்பக்கமாக வந்தன. தீய சகுனமாகவும் முற்பட்டுச் சென்றனவாகித் தடைசெய்தன. இதனைக் கண்டதசரதன் ஏதோ இடையூறு விளையப் போகின்றது என்று கருதி அப்பாற் செல்லாதவனாய் நின்று விட்டாள். உடனே சகுனசாத்திரத்தை அறிபவனான நிமித்திகன் ஒருவனை அழைத்து ஆராய, அவனும் இப்போது இடையூறு உள்ளது: அது முடிவில் நண்றாய் விடும் என்று கூறினான்.

வலியன், கருடன், காடை, கழுகு, ஆந்தை, உடும்பு, கீரி, குரங்கு இவை இடமாதல் உத்தமம். நாரை, விச்சுளி, காக்கை, செம்போத்து, கிளி, கொக்கு, மயில், கோழி, ஓணான், புள்ளிமான், புனுகுப் பூனை, புலி, நரி இவை வலமாதல் உத்தமம். இவைமாறி வலமும் இடமுமானால் சகுனத் தடையாகும். சகுனத்தடை தோன்றியதனால் சக்கரவர்த்தி அஞ்சி மேலே சொல்லாதவனாயினான். இங்கு நிமித்திகன் காகம் முதலியன இடமானதால் இடையூறு வரும் என்றும், மயில் முதலியன வலமான தனால் அது நன்மையாய் முடியுமென்றும் நிமித்திகன் கூறினன் என்பது ஈண்டு அறியப்படும்.

51. பாலகா. பரசுராமப் - 8