பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 141

கனவைப் பொருளாகக் கொண்டு முத்தொள்ளா யிரத்திலும் ஒரு பாடல் வருகின்றது.

களியானைத் தென்னன் கனவில்வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான்-தெளியாதே செங்காந்தல் மெல்விரலால் சேக்கை தடவந்தேன் என்காண்பென் என்னலால் யான்".

இது பாண்டியன்மீது காதல் கொண்ட ஒரு மங்கையின் கூற்று. “பாண்டியன் தண்ணளி செய்வான்போல் என்கனவில் வந்தாள். அதைச் சரியாகப் புரிந்து, கொள்ளாமல் என் செங்காந்தள் மெல்விரலால் படுக்கையைத் தடவினேன். என்னைத் தவிர நான் காண்பது ஒன்றும் இல்லை" என்கின்றாள்.

கனவுபற்றி சிலப்பதிகாரத்தில் வரும் குறிப்பையும் காண்போம். தேவந்தி என்பாள் கண்ணகியின் பார்ப்பனத் தோழி. அவள் நாடோறும் சாத்தன் கோயில் வழிபாடு செய்யும் நியமம் பூண்டிருந்தாள். அவள் கண்ணகிக்குக் கணவனைப் பிரிந்த குறையொன்றுண்டு என்பதை அறிவாள். அவள் சாத்தன் கோயிலை அடைந்து, அறுகு முதலியவற்றை இவள்'கணவனைப் பெறல் வேண்டும்’ என்ற கருத்துடன் சாத்தன்மேல் தூவி வழிபட்டுக் கண்ணகியின் பாற்சென்று கணவனைப் பெறுக என வாழ்த்தினாள்.

இதனைக் கேட்ட கண்ணகி நீ இங்ங்னம் கூறுதலால் கணவனைப் பெறுவேன். ஆயினும் நான் கண்ட கணவினால் என் நெஞ்சு ஐயுறாநின்றது என்று கூறித் தான் கண்ட கனவினை எடுத்தியம்புகின்றாள். "என் கைப்பிடித்த கொழுநன் என்னை அழைத்துக் கொண்டு போக, நாங்கள் ஒரு பதியை அடைந்தோம். அந்த ஊரார் எங்கட்கு

61. முத்தொள் - 63