பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம் 161

கருமுகில் கொழுந்தொழில் காட்டும் சோதியைத்

திருவுறப் பயந்தின்ஸ் திறங்கொள் கோசல்வ" என்று கூறுவான். அண்டங்களையெல்லாம் தன் வயிற்றில் அடக்கி வைத்துக்கொண்டு இருக்கும் திருமாலைக் கோசலை மகனாகப் பெற்றாள் என்பது கவிஞன் நமக்குக் காட்டும் குறிப்பாகும். இதனையே குலமுறை கிளத்துப் படலத்திலும்,

எழுதரிய திருமேனிக் கருங்கடலைச் செங்கனிவாய்க் 5.

கவுசலைஎன் பாள்பயந்தாள்

என்று விசுவாமித்திரர் வாக்காகக் கூறுவான்.

பாலகாண்டத்தில்,

உலகம் யாவையும் தாம்.உள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர்"

என்று படைப்பு, காப்பு, அழிப்பு என்னும் முத்தொழிலுக்கும் முதற்காரணமானவர்-கடவுள்-என்று கூறுவான். அயோத்தியா காண்டத்தில் இவ்வுலகை யெல்லாம் ஆண்டவன் உடலாகக் கொண்டவன் என்பதை,

வானின்று இழிந்து வரம்பிகந்த

மாபூ தத்தின் வைப்பெங்கும் ஊனும் உயிரும் உணர்வுபோல்

உள்ளும் புறனும் உளன்

4. பாலகா. திருவவதாரம் - 150 5. மேற்படி - குலமுறை - 20 6. மேற்படி - காப்பு 7. அயோத்தி - காப்பு