பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்று உணர ఉత్య్ర இதனை வைணவ தத்துவம் சரீர-சரீரி பாவனை "என்று பேசும். இத்தகைய கடவுளை அருமறைகளாலும் அந்தணர்களாலும் நான்முகன் முதலிய தேவர்களாலும் அறிய முடியாது என்பதை ஆரண்ய காண்டத்தின் காப்புச் செய்யுளால் உணர்த்துவான். "புலன் ஐந்திற்கும் சொலப் படான் உணர்வின் மூர்த்தி" என்ற நம்மாழ்வாரின் கருத்திற்கு இஃது இயைத்திருத்தல் உணரத்தக்கது.

ஒவ்வொரு சமயமும் கடவுளை ஒவ்வொரு விதமாகக் கூறும். ஒவ்வொரு சமயத்தினரின் மனப்பான்மைக்கு ஏற்றவாறு கடவுள்' என்ற பொருள் விரிந்து விளக்கம் தந்து நிற்கும். இதனைக் கம்பன் தன் கூற்றாக,

ஒன்றே என்னின் ஒன்றேயாம்

பலவென்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம்

ம்என்று உரைக்கில் ஆமேயாம் இன்றே என்னில் இன்றேயாம்

உளதென்று உரைக்கில் உளதேயாம்'

என்று உணர்த்துகின்றான். இன்னும்,

மும்மைசால் உலகுக் கெல்லாம்

மூலமந் திரத்தை முற்றும் தம்மையே தமக்கு நல்கும்

தனிப்பெரும் பதத்தைத், தானே இம்மையே எழுமை நோய்க்கும்

மருந்தென இராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னை

8. திருவாய் 2.4:10 9. யுத்த. காப்பு 10. கிட்கிந்தை - வாலி வதை - 71