பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 & பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

தனது வயிற்றினுள் இடத் துணிய, அதற்குள் அடங்கிய இராமலக்குமணர்கள் அவனுடைய இரண்டு கைகளையும் வெட்டித் தள்ளினர். உடனே அவன் சாபத்தினால் நேர்ந்த கோர உருவம் நீங்கி திவ்விய உருவம் பெற்று ஆகாயத்தில் நின்று கொண்டு ஒன்பது பாடல்களால் துதிக்கின்றான் இத்துதிப்பாடல்களில் இராமன் பரம் பொருள் என்று காட்டப்பெறுகின்றது. அவற்றில் ஒரு பாடலை ஈண்டுக் காட்டுவேன்.

மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த கோலமே யாவர்க்கும் தெரிவரிய கொள்கைத்தான் ஆலமோ? ஆலின் அடைவோ ? அடைக்கிடந்த பாலனோ? ஆதிப் பரமனோ? பகர்ாயே’

(மூலம் - காரணப்பொருள்; கோலம் - வடிவம்; அடை - இலை; ஆதிப்பரமன் - மூலமான பரம்பொருள்) 'மூலமே இல்லா முதல்வனே என்பதால்

எம்பெருமானுக்கு முந்திய வேறொரு காரணப் பொருள் இல்லாத முழுமுதற் கடவுள் என்பது பெறப்படுகின்றது. எல்லாப் பொருள்களும் எம்பெருமானிடமிருந்து தோன்றியவையேயன்றி எம்பெருமான் எவற்றினின்றும் தோன்றாதவன்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும்

வித்து ஆய் திருவாய் 15:2)

தானோர் உருவே தனிவித்துஆய் தன்னின் மூவர் முதலாய

வானோர் பலரும் முனிவரும்

மற்றும் மற்றும் முற்றும்ஆய் (திருவாய் 1.5:4)

19. ஆரணிய - கவந்தப் - 42-50 20. மேற்படி - 43