பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத் தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து-நித்தமும் அம்புவியில் மக்கள் ஆமுதம் அருந்தவைதத கம்பன் கவியே கவி"

என்றும்,

கம்பன் கவியின்

களியமுதம் உண்டிடமால் அம்புவியில் வந்திங்(கு)

அவதாரம் செய்தானோ 27 وه என்றும் போற்றிப் புகழ்வதைக் கண்டு மகிழலாம். கவிதைச் சிறப்புதான் பிற சமயத்தினரையும் ஈர்த்து ஆழங்கால்படச் செய்தது. கிறித்தவ சமயத்தைச் சார்ந்த H.C. கிருஷ்ணபிள்ளையையும், இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்த உமறுப் புலவரையும், வீரமாமுனிவர் என்று வழங்கப்பெறும் பெஸ்கி பாதிரியாரையும் ஈர்த்தது கவிதைச் சிறப்பே. அவர்தம் நூல்களில் கம்பனின் கவிதைத் தாக்கத்தைக் கண்டு மகிழலாம்.

கவிதை-காவியநடை பெரும்பாலும் உலக மகா காவியங்கள் யாவும் ஏதோ ஒருவகைக் கவிதையால்தான் படைக்கப் பெற்றுள்ளன. மில்ட்டன் படைத்த துறக்க நீக்கம் (Paradise Lost) செந்தொடைப் பாவால் (Blank verse) ஆக்கப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை அகவல் யாப்பாலும் சீவக சிந்தாமணி, இராமகாதை விருத்த யாப்பிலும் அமைக்கப் பெற்றிருப்பதைக் காணலாம். உரைநடை அறிவு பூர்வமானது; செய்யுள் நடை உணர்வு பூர்வமானது. இதனால்தான் அட்சன் என்ற மேனாட்டு இலக்கியத் திறனாய்வாளர் "கவிதை

25. மலரும் மாலையும் - கம்பர் - 17. 27. மேற்படி - தாலாட்டு - 12