பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

எவ்வளவு மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்? இந்த உணர்வு கேற்றவாறு ஒரு நூறு பாடல்களையாவது பாடி இருக்க வேண்டாமா? தக்க வாய்ப்புகள் இருந்தும் ஏன் பாடவில்லை? பாடாததற்கு என்ன காரணம்? இந்த இன்ப உணர்வுகட்கு வடிவம் கொடுத்துப் பாடல்கள் தோன்றியிருந்தால் காவியம் இன்னும் சிறப்புடன் திகழ்ந்திருக்குமல்லவா?

எனக்கு ஒரு காரணம் தோன்றுகின்றது. கம்பனுக்கு ஒரே ஒருமகன் அம்பிகாபதி என்ற பெயருடன் இருந்ததாகச் செவி வழிச் செய்தி உள்ளது. ஆனால் எந்த இலக்கிய ஆசிரியரும் இவன்பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த அம்பிகாபதி சோழ அரசன் மகளைக் காதலித்ததாகவும், அரசன் வெகுண்டு அம்பிகாபதியைச் சிறையில் அடைத்து மரணதண்டனை விதித்ததாகவும் மற்றொரு செவிவழிச் செய்தியையும் கேள்வியுறுகின்றோம். இந்த மரண தண்டனைக்குப் பிறகு கம்பன் இராம காதையை இயற்றியிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றது. இதனால் }வன் குழந்தை இன்பத்தைப் பற்றிப் பாடவில்லை என்பதும் பாடவிரும்பவில்லையோ? என்பதும் என் ஊகம். துக்கம் நெஞ்சை அடக்கும்போது பாடல்கள் எப்படித் தோன்றும்?

ஆனால் மக்களோ சகோதரர்களோ இறக்கும் போது இறந்த நிலையைச் சித்திரிக்கும்போது தேங்கியிருந்த துக்கத்தின் விளைவாக அற்புதமான பாடல்கள் பிறந்துள்ளன. அட்சயகுமரன், இந்திரஜித்து, அதிகாயன், கும்பகருணன், இராவணன் இவர்கள் இறந்தபோது மண்டோதரி, இராவணன், வீடணன் இவர்கள் புலம்புவனவாக அமைந்த பாடல்கள் நெஞ்சை உருக்கும் ஆற்றலைப் பெற்றுத் திகழ்கின்றன. கண்ணிர்ப் பெருக்குடன்