பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

சகோதரத்துவம், இதனைக் கம்பன் காவியத்தில் காணலாம். இக்கருத்து மனிதர்கள், வானரங்கள், அரக்கர்கள் வாழ்க்கையில் கண்டு மகிழலாம்.

மனிதர்கள். தசரதனின் மனைவியருள் சுற்றத்தார் தேவரொடும் தொழநின்ற கோசலை மூன்றுலகும் ஈன்றானை முதல் மகனாகப் பெற்றாள். படரெலாம் படைத்தாளும் பழிவளர்க்கும் செவிலியும் இடரிலா மூகத்தாளாகிய’ கைகேயி பரதனை ஈன்றாள். அறந்தானே என்கின்ற சுமித்திரை யாவர்க்கும் தொழுகுலமாம் இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாத' இலக்குமணனையும் சத்துருக்கனையும் பெற்றெடுத்தாள். இந்த நால்வரும் ஒற்றுமையாக இருந்தாலும், பெருமாளும் இளைய பெருமாளும் இராமலக்குமணர்களும் நெய்குழல் உதும் இழையென ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் தடையாடிவந்தனர். பரதாழ்வானும் சத்துருக்கனாழ் வானும் ஒரு நொடிப் பொழுதும் ஒருவிரைவிட்டு ஒருவர் பிரியாமல் இராமலக்குமணர்போல் கூடி நடை பாடினார்கள்.

முடிசூடு விழா தடைபடுகின்றதை நாம் அறிவோம். இராமன் தாயும் தந்தையுமாகிய கைகேயியின் கோயில் புகுகின்றான். அலுவலகத்தில் Fair Copy (By Order) என்று ஒருவருக்கு வழங்குவது போல,

"ஆழிருழ் உலகம் எல்லாம்

பரதனே ஆள நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித்

தாங்கரும் தவமேற் கொண்டு பூழிவெங் கானம் நண்ணிப்

புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டு ஆண்டின வாவென்று

இயம்பினன் அரசன்'

5. அயோத்தி - கைகேயி சூழ்வினை - 107