பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 49

படுத்தி அங்கேயே இருக்குமாறு வற்புறுத்துவதை நான்கு பாடல்களால் விளக்குகின்றான் கவிஞன்.' அவற்றில் ஒன்று:

துன்புளது எனின்அன்றோ

சுகமுளது அதுவன்றிப் பின்புளது இடைமன்னும்

பிரிவிளது எனஉள்ளேல் முன்புளெம் ஒருநால்வேம்

முடிவுளது எனஉன்னா அன்புள இனிநாமோர்

இவர்க்ள் உளரானோம்."

"உன்னைக் காண்பதற்ககு முன்பு நாங்கள் நான்ககு பேர் சகோதரர்கள். உன்னைக் கண்டபிறகு நாம் ஐந்து சகோதரர்களாய் விட்டோம் என்று கருதுவாய்" என்று கூறுவான். இராமனது இந்தப் பரந்த நோக்கத்தை எண்ணிய திருமங்கையாழ்வார் அந்த அருங்குணத்தில் ஆழங்கால் பட்டு, -

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது

இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து மாழை மாண்பட நோக்கியுன், தோழி;

உம்பி எம்பிஎன்று ஒழிந்திலை உகந்து, 'தோழன் நீஎனக்கு இங்குஒழி' என்ற

சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட, ஆழி வண்ண நின் அடியிணை அடைந்தேன்

அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே ဒS என்று திருவரங்கத்துப் பெருமானை இராமனாக நினைந்து மங்களாசாசனம் செய்து மகிழ்கின்றார்.

34. அயோத்தி - கங்கைப் - 73-76. 35. மேற்படி - 74. 36. பெரி. திரு. 5.81