பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வாழுநாள் அன்று காறும்

வாளெயிற்று அரக்கர் வைகும் ஏழ்கடல் இலங்கைச் செல்வம்

நின்னதே தந்தேன் என்றான் இதனை உழிஞைத் திணைக்குத் துறை கூறும் தொல்காப்பியச் சூத்திரத்தில்" "கொள்ளார் தேயம் குறித்த கொற்றம்” என்ற துறைக்கு அதாவது, பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான்போல வேண்டியோர்க்குக் கொடுத்தல்' என்பதற்கு இதனை எடுத்துக்காட்டாகக் கூறுவர் நச்சினார்க்கினியர். இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணனுக்குக் கொடுத்த துறையும் அது என்பது அவர் கூற்று.

அடுத்து இராமன் தம்பியை நோக்கி வீடணனுக்கு "சூட்டுதி மகுடம் என்றான்" அதற்கு வீடணன்,

4t

களவியல் அரக்கன் பின்னே

தோன்றிய கடன்மை தீர

இளையவற் கவித்த மோலி

என்னையும் கவித்தி என்றான்"

பின்னர் இராமன் வீடணனைத் தம்பியாக ஏற்றுக் கொள்ளுகின்றான்.

குகனொடும் ஐவ ரானேம்;

முன்புயின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவ ரானேம்;

எம்முழை அன்பின் வந்த

41. யுத்த. வீடணன் அடைக். 142. 42. தொல். பொருள். புறத் - 12 நச்) 43. யுத்த. வீடணன் அடைக் - 144 44. மேற்படி - 145