பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்று கூறவும் இராவணனை விட்டு நீங்கினான்.

எத்துணை வகையினும் உறுதி எய்தின ஒத்தன உணர்த்தினேன் உணர கிற்றிலை அத்த என் பிழைபொறுத்து அருளு வாய்என உத்தமன் அந்நகர் ஒழியப் போயின்ான்."

இவன் சகோதர வாஞ்சையைத் துறந்து நீதிவழி நிற்றலைக் காண்கின்றோம்.

மரணம் பகையை மறக்கச் செய்யும் என் உண்மையை வீடணனிடத்தும் காணலாம். இவ்விடத்தில் வான்மீகி பகவான் "பகைமைகள் மரணத்தை முடிவாக உடையன.” என்று கூறியுள்ளதைச் சிந்திக்கலாம். வீடணனை நோக்கி, "வீடனா, இறந்தவன்மீது வயிரங் கொண்டு வாளா இருத்தல் தக்கதன்று. சமக் கடன்களைச் செய்யத் துணிவாய்" என்று இராமன் கட்டளையிட வீடணனும் "வீழ்ந்தனன் அவன்மேல் வீழ்ந்த மலையின் மேல் மலை வீழ்ந்தென்ன" பின்னர் புலம்பத் தொடங்குகின்றான். ஏழு கவிகளில்”

"அளவிடுதற்குரிய வல்லமையையுடைய அண்ணா வோ! அண்ணாவோ அசுரர்கட்குப் பிரளயம் போன்றவனே! அமரர்கட்கு எமனே! எந்த நஞ்சும் உட்கொள்ளாமல் உயிரைக் கொள்ளமாட்டாது. அதற்கு மாறாக சானகி என்ற பெருநஞ்சு கண்ணால் நோக்கிய மாத்திரத்தில் உன் உயிரைப் போக்கிவிட்டதே ! வீரர்கட்கெல்லாம் வீரனான நீயும் சாதாரண மனிதனைப் போல உயிரொழிந்து கிடக்கின்றாயே! உன்னை அண்ணன் என்று கருதாமல் விட்டுச் சென்ற, என்னுடைய ஆராய்ந்து

55. மேற்படி - 13. 56. யுத்த. இராவணன் வதை - 218. 57. மேற்படி - 220-226.