பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா போன கோரைப் பாயின்மேல், தீராத காய்ச்சலுடன் துன்பப் பட்டுக் கொண்டிருக்கும் காட்சி, அவன் மனக்கண் முன்னே வந்து நின்றது. காய்ச்சலில் அவள் படுத்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அதற்கென்று மருந்துகள் வாங்கித் தர ராமன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம், தோல்வியிலேயே முடிந்து போயின. சீதை இரண்டு மூன்று வீட்டில் காலையும் மாலையும் வேலை செய்து, இருபதோ முப்பதோ - கொண்டு வருகிறாள். ராமனுக்கு இன்னும் கொஞ்சம் அதிக சம்பளம். இரண்டு பேர் சம்பளத்தையும் சேர்த்தால் கூட, வாரத்தில் பாதி நாட்கள் தான் சாப்பிட முடியும்! மீதி நாட்களை, அப்படி இப்படி என்று அரைப் பட்டினியும் கால் பட்டினியுமாக ஒட்டித்தான், காலத்தைக் கழித்து வந்தனர். ராமன் சீதை தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு. அவனுக்கு, குகன் என்று பெயரிட்டனர். செல்லமாக ராஜா போல வளர்க்க அவர்களுக்கு ஆசைதான். செல்வ நிலைமை அப்படி இல்லையே!