பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 11. தங்களைப் போல தங்கள் மகனும் வேலைக்காரனாக, கூலிக்காரனாக வாழவே - கூடாது! எப்படியேனும் உயர்ந்த படிப்பைப் படிக்க வைத்து, நல்ல உத்தியோகத்தில் இருக்கச் செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு ஆசைதான். நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கிறதா என்ன? எப்படியோ அவர்கள் முயற்சி பலித்தது. தங்கள் கூட இருந்தால், பையனுக்கு படிப்பு ஏறாது என்ற முடிவுக்கு வந்து, அவனைக் கொண்டு போய் ஒரு விடுதியில் சேர்த்து விட ஏற்பாடு செய்தனர். a - - உணவு இலவசமாகத் தந்தனர் என்றாலும், மற்ற செலவுகளுக்கு ராமன் தானே குகனுக்குத் தரவேண்டும்! - - அடிக்கடி குகனுக்குப் பணம் தேவைப்படும். குறைந்த தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைதான். ஆகவே, ராமன் அடிக்கடி தன் முதலாளியிடம் கடன் கேட்க ஆரம்பித்தான். அந்தப் பணத்தைத் தன் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் செய்தான். அதனால் பணம் பற்றாக் குறை ஏற்பட்டது. சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு மாளிட்டான் எாலன்