பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவ்வாறு பட்டினியும் பசியும். இராப்பகல் உழைப்புமாக இருந்த ராமன், ஓடாக இளைத்து வந்தான். இனிமேல் இளைக்க முடியாது என்று எலும் புந் தோலுமாகக் காட்சியளித்தான். இனிமேல் என்னால் தாங்க முடியாது என்று நினைத்தாளோ என்னவோ, சீதை படுத்த படுக்கையாய் நோயில் விழுந்து விட்டாள். எவ்வளவு துன்பம் வந்தாலும், குகனை நல்ல முறையில் வளர்த்துப் படிக்க வைக்கும் . வரை, பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டிக் கொண்டு வாழ்ந்தாலும், சீதைக்கு வந்த நோயைத் தீர்க்க, ராமன் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. 'இந்தாப்பா! மருந்தை வைத்து எவ்வளவு நேரமாகுது. நின்னுகிட்டே தூங்குறியே! பணத்தைக் கொடு' என்று மருந்து கடைக்காரனின் காட்டுக் கூச்சல், ராமனை எழுப்பி விட்டது. கடையில் முன்னே நின்றுகொண்டு தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்த ராமன், திடுக்கென்று விழித்தான். மருந்துப் பொட்டலத்தைப் பார்த்தான். கடைக்காரனைப் பார்த்தான். மிரள