பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 'நமக்கிருக்கும் 5 ஏக்கர் நிலம் எப்படி வந்தது என்று உனக்குத் தெரியுமா?’ என்று மீண்டும் கேட்டான் தம்புசாமி. அவனது மனைவி தன் சேலைத் தலைப்பால் தனது கண்ணிர் வழியும் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்ததும், தம் புசாமிக்கும் கண்கள் கலங்கின. - நான் ஊதாரி தான்! உருப்படாதவன் தான். சோம்பேறி தான். நீங்கள் சம்பாதித்ததும் உண்மை தான். அதில் எனக்குப் பாகம் உண்டா? பிரித்துத் தரமுடியுமா முடியாதா? - ' தம்பி சிவசாமி! நான் சொல்வதை தயவு செய்து கேளப்பா! நாம் சாகும் வரையிலும் ஒன்றாகவே, ஒரே குடும்பமாகவே இருக்க வேண்டும் என்று விரும் பினேன். உன் அண்ணியும் அப்படியே விரும்புறாள்! நீயோ எதையோ நினைத்துக் கொண்டு...'தம்புசாமி முடிக்கவில்லை. எதையோ நினைக்கவில்லை. எப்படியும் கொடுக்க மன மில்லை. எனக்குரிய பங்கைத் தரமுடியுமா முடியாதா.-- பாகம் பிரித்துத் தரமுடியாது என்று சொல்லி விட்டால், நான்