பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அருகில் சென்று, சிவசாமி இங்கே வா என்று கோபத்திலும் மிக அமைதியாகக் கூப்பிட்டான். அண்ணன் பசித் தோல் போர்த்திய புலி போல தன்னைத் தாக்கத்தான் கூப்பிடுகிறான். என்று நினைத்துக் கொண்டு, உடனே தாவி தம்புசாமியின் முகத்திலே ஓங்கிக் குத்தினான். தம்புசாமியின் கடைவாயில் இரத்தம் கசிந்தது. கொப்புளித்த வண்ணம் இருந்தது. அப்படியே மல்லாந்து தரையில் விழுந்தான். தலையின் பின்புறம் நல்ல அடிபட்டிருந்தது. அவனால் எழுந்திருக்க முடியவில்லை. இந்தக் கொடிய நிகழ்ச்சியைப் பார்த்த வேலைக்காரர்கள், அப்படியே சிலை போல நின்றுவிட்டனர். - - பயந்தாங் கொள்ளிகளே! ஒடுங்கள்! 'மாங்காய்களை நானே பறிக்கிறேன் பார்” என்று விடுவிடென மரத்தின் மீது ஏறினான். யாராவது என்னைத் தடுத்தால், இந்தத் தடியாலே மண்டையை உடைக்கிறேன் பார்! அப்பொழுதுதான் எல்லாருக்கும் புத்திவரும் என்று கூறிக்கொண்டே ஒரு நீண்ட தடியுடன் மரத்தில் ஏறினான். - o