பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா


தேனீக்கள் ஆங்காரத்துடன் பாய்ந்து வந்தன. தங்கள் கூட்டைத் தாக்கிய தறுதலையைச் சுற்றி, வளைத்து முற்றுகையிட்டதுபோல தாக்கின.

தேகம் முழுவதையும் தேனீக்கள் கொட்டித் துளைத்தன.

வலி பொறுக்க முடியவில்லை, மரத்திலிருந்து கீழே இறங்கவும் வழி தெரியவில்லை. அங்கிருந்து அவன் தடுமாறிக் கீழே விழுந்தான்.

'ஐயோ அண்ணா!' என்று அவனை அறியாமலே கத்தி விட்டான்.

எழுந்திருக்க முடியாமல் கிடந்த தம்புசாமியின் காதில், தன் தம்பி மரண ஒலமாகக் கூப்பிட்ட குரல் வந்து மோதியது.

இவ்வளவு நேரம் மயக்கநிலையில் கிடந்த தம்புசாமி, தட்டுத்தடுமாறி எழுந்து தன் தம்பியை நோக்கி ஒடினான்.

பலாப் பழத்தில் ஈ மொய்ப்பது போல சிவசாமியை தேனீக்கள் சிவசாமியின் உடலை மொய்த்துக் கொண்டிருந்தன. தம்பி என்று தம்புசாமித் தாவி தன் தம்பியின் மேல் விழுந்து, அவனுடைய உடலை