பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 49 போர்த்திக் கொண்டான். தேனிக்கள் இப்பொழுது தம்புசாமியைத் தாக்க ஆரம்பித்தன. தன்னைத் தேனீக்கள் தாக்கினாலும், தம்பியைக் காப்பாற்றிவிட்டோம் என்ற திருப்தியில், வேதனையை மெளனமாகத் தாங்கிக் கொண்டிருந்தான் தம்புசாமி. இதனைப் பார்த்த முத்துலட்சுமி வீட்டிற்குள் ஓடினாள். சாக்கு ஒன்றினால் தன்னை முழுதுமாக மறைத்துக் கொண்டு, தீப்பந்தம் ஒன்றையும் எடுத்து வந்து, தேனீக்களை சாடத் தொடங்கினாள். ... " தன் குடும்பத்தையே காக்க வேண்டும் என்ற வெறியுடன் முத்துலட்சுமி போராடினாள். வெற்றியும் பெற்றாள். வெறி பிடித்த தேனீக்களிடமிருந்து சகோதரர் இருவருக்கும் விடுதலை கிடைத்தது தம்பி சிவசாமி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். உனக்கு ஒன்றும் வலியில்லையே என்று தம்புசாமி தன் தம்பியின் தேகம் முழுவதையும் தடவிக் கொடுத்தவாறு இருந்தான். . அண்ணா! அறிவில்லாத என்னை மன்னித்து விடுங்கள். இந்தப் பாவி மீதா