பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏅ டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா என்றார் ஆசிரியர். - இந்த புத்தகம் உங்களிடம் எப்படி வந்தது? காலையில் முதல் மணி அடித்ததும், அவன் வந்து என்னிடம் தந்துவிட்டுப் போனான். அவனிடம் நான் நேற்றே கேட்டிருந்தேன். மாணவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. புத்தகத்தை ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு, நம்மையெல்லாம் இந்த சுந்தரம் மாட்டி விட்டானே என்று மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சைகையால் பேசிக் கொண்டானர். எங்கே அந்த சுந்தரம்? போய் அவனை அழைத்து வாருங்கள்! ஒரு பையன் வேகமாக அடுத்த வகுப்பை நோக்கி ஓடினான். ‘சுந்தரத்தின் ஞாபகமறதியால், எவ்வளவு துன்பம் பாருங்கள், வந்ததும் என் அறைக்கு அனுப்பி வையுங்கள் என்று தலைமை ஆசிரியர் புறப்பட்டார். சுந்தரத்தை அழைத்துக்கொண்டு அந்தப் பையன் வந்தான். - சுந்தரம் இந்தா உன் புத்தகம். என்னிடம் தந்து விட்டு, திருட்டு போய்விட் க என்சை