பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ + - டாக்டர் எஸ். தவராஜ் செல்லையா அடிக்கடி குறை சொல் வான். அவனுக்கு ஒன்றும் தெரியாது என்பான் குருட்டுப் பூனை விட்டத்தில் தாவி நின்றதுபோல, குருட்டு அதிர்ஷ்டத்தால் அவனுக்குக் குழுத் தலைவன் பதவி கிடைத்து விட்டதென்று இளங்கோ சொல்லியதை எல்லோரும் நம்பினார்கள். வேறுவழி! அவன் வாங்கித் தரும் தின்பண்டங்களுக்காக அல்லவோ அவர்களும் கூடவே திரிந்தார்கள். வகுப்புக்களுக்கு இடையே வருடந்தோறும் விளையாட்டுக்கள் நடக்கும். வழக்கம் போல, அந்த வருடமும் கால்பந்தாட்டத்தில் போட்டியை நடத்த ஆரம்பித்தார் உடற்கல்வி ஆசிரியர். மூர்த்தியும் இளங்கோவும் பத்தாம் வகுப்பு 'அ' பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் பள்ளிவிட்டதும் கால்பந்தாட்டப் போட்டி என்று ஆசிரியர் அன்று அறிவித்துவிட்டார். இரண்டு குழுக்களும் மாலை 4 மணிக்கு விளையாடத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்து விட்டது. இப்பொழுது யார் நம் குழுவிற்குத் தலைவனாக இருக்க வேண்டும் என்ற பேச்சு வந்தது. எல்லோரும் இளங்கோதான் குழுத் தலைவனாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். மூர்த்தியும்