பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் -- 67 அதுவே சரி என்று கூறினான். ஆனால், இளங்கோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பள்ளிக்கும் மூர்த்தியே குழுத் தலைவன். ஆகவே, வகுப்புக்கும் அவன்ே குழுத் தலைவனாக இருக்க வேண்டும். அத்துடன் மூர்த்தி நல்லவன். அதிக அனுபவம் உள்ளவன். விளையாட்டில் கெட்டிக்காரனும் ஆவான் என்று இளங்கோ புகழ்ந்து பேசினான். - அவன் பேசியது உண்மையில் விருப்பத்துடன் அல்ல. வஞ்சகமாகப் பேசினான். எப்படியும் குழுத் தலைவன் பதவியை மூர்த்திக்குத் தந்து, அவனுக்குக் கெட்டப் பெயர் வாங்கித் தந்து விட வேண்டும் என்பது தானே அவன் திட்டம்! மூர்த்தி முதலில் மறுத்துப் பார்த்தான். மாவட்ட விளையாட்டு வீரன் இளங்கோவே தலைவனாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இளங்கோ ஒத்துக் கொள்ள வில்லை. நாளை மறுநாள் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக விளையாடப் போகிறேன். அந்தப் பெருமை எனக்குப் போதும். இது வேண்டாம் என்று Aro- zo so گـ كـ گا ۔A عكستعصص = حســـس = ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔