பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தள்ளி கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். தலைமை ஆசிரியர் அருகில் உள்ள மேஜை மீது ஒரு பெரிய வெற்றிக் கேடயம் (Shield) இருந்தது. அதன் மேல் போய் மோதிக் கொண்டார்கள். அந்தக் கேடயம் தவறி இளங்கோவின் முன் பாதத்தில் விழுந்தது. அது பெரிய கேடயம், மாவட்டத்தில் கால்பந்தாட்டத்தில் சென்ற ஆண்டு வெற்றி பெற்றதற்காகக் கொடுக்கப்பட்டது. இளங்கோ ஐயோ! 'அம்மா என்று அலறினான். கொஞ்ச நேரத்திற்குள் இளங்கோவின் பாதம் வீங்கிப் போயிற்று. வலி பொறுக்க முடியாமல் அலறினான். ஆஸ் பத்திரிக்குக் கொண்டு போகலாம் என்றார் தலைமை ஆசிரியர். பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த சைக்கிள் ரிக் ஷா கொண்டுவரப்பட்டது. அதில் இளங்கோவை ஏற்றிக் கொண்டு சென்றார்கள். டாக்டர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார். பரிசோதனை செய்தார். கால் நன்றாக நசுங்கி எலும்பு உடைந்திருக்கிறது கால் தேறுவதற்கு சுமார் ஆறுமாதம் கூட ஆகலாம் என்று கூறினார். -