பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 . டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா எப்பொழுதுமே வராது. அவனது எசமானி யசோதை அம்மாளின் குரல் என்பது, அந்தக் கணிர் என்ற குரலைக் கேட்டாலே புரிந்துவிடும். பத்து வீட்டிற்கு அப்பாலும் கேட்கும் படி கத்திக் கூப்பிடும் எசமானியின் அழைப்புச் சத்தம் கேட்ட போது, ராமன் தண்ணிர்க் குழாயைக் கையில் பிடித்தபடி, தோட்டத்தில் பூச் செடிகளுக்குத் தண்ணிர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். - மீண்டும் ஒரு அலறல் குரல். ராமன் தண்ணிர்க் குழாயைத் தரையில் அப்படியே போட்டு விட்டு வீட்டிற்குள் ஓடினான். யசோதை எதிரே வந்து நின்றாள். ராமா! எத்தனை தடவை கூப்பிடுறது! கூப்பிட்ட குரலுக்கு வராமலிருந்தா, நீ இங்கே இருந்துதான் என்ன பிரயோசனம்? 'இனிமே, உடனே வந்துடுறேம்மா ராமன் தாழ்ந்த குரலில், தணிந்து போய் கூறினான். 'அய்யா அவசரமாக வெளியே போகனும். அதற்குள் இந்தச் சீட்டில் இருக்கும் மருந்தை வாங்கிக் கொண்டு வா! ரொம்ப அவசரம்!