பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 83 குமார் நினைத்துக் கொண்டே சைக்கிளை ஒட்டினான். நண்பன் கோபுவை மனதுக்குள் பாராட்டினான். அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. கோபுவும் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தான். - வேகமாக சைக்கிளை ஒட்டினான் குமார். திடீரென்று சைக்கிளை மிதித்து ஒட வைக்கும் 'பெடல் கீழே விழுந்து விட்டது. சைக்கிளை நிறுத்தி இறங்கினான். அதற்குள் கோபு அழ ஆரம்பித்து விட்டான். - - என் புதிய சைக் கிளை உடைத்து விட்டாயே! என் அப்பா என்னை அடிக்கப் போகிறார்! நீ தானே உடைத்தாய்? வா என் வீட்டுக்கு என்று சைக்கிளை தள்ளியபடியே கூப்பிட்டான் கோபு. - குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. கோபு வெளியில் குமாரை நிற்க வைத்து விட்டு, வீட்டுக்குள் ஓடினான். கோபுவின் அம்மா வேகமாக வந்தாள். ஏண்டா குமார்! புதிய சைக்கிளை ஏன்