பக்கம்:பதினாறும் பெறுக.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9



கமல: என்ன புத்தகம் என்றுதானே கேட்டேன். ஏன் குளறுகிருய் ? கொண்டா அதை.

தாழம்பூ: (பயந்து) அம்மா ! இது என்னுடையதல்லம்மா.

(கொடுக்கிறாள் அச்சத்தோடு கமலவேணி வாங்கிப் பார்க்கிறாள்)

கமல: 'பயங்கரக் காதல் ” இது புத்தகத்தின் பெயர். கவர்ச்சிப்படம் அட்டையில். தாழம்பூ! இதுபோன்ற செக்ஸ் ” புத்தகத்தைப் படிப்பதே தவறு. அதைவிடத் தவறு மங்கை பொருத்தி ஒரு இளைஞனிடமிருந்து பெற்றுப்படிப்பது !

தாழம்பூ: (அழாக்குறையாக) அம்மா ! . . . . . . . . என்னை மன்னித்து விடுங்களம்மா !

கமல: இதை இளங்கோவே கொடுத்தானா ? நீ கேட்டாயா ?

தாழம்பூ: கொடுத்-கேட்-இல்லை-இல்லை.

கமல: ஆகமொத்தம் இருவரும் குற்றவாளிகள். தாழம்பூ என் குணம் தெரியுமல்லவா உனக்கு ?

தாழம்பூ: தெரியும் அம்மா! புத்தகத்தை வாங்கியது தவிர வேறு எக் குற்றமும் நான் செய்யவில்லையம்மா. என்னை நம்புங்கள் இந்தப் பிழையை மன்னித்து விடுங்கள். இனி இதுபோல் நடந்துகொள்ளவே மாட்டேன். (காலில் விழுகிறாள்)

கமல (தூக்கிவிட்டு) சரி, இனிமேல் புத்திசாலித்தனமாக நடந்துகொள். (போகிறாள் கமலவேணி).

காட்சி 4

இடம்: பூங்கா

காலம் : மாலை (இளங்கோவும்,தாழம்பூவும் கையில் புத்தகத்துடனிருக்கின்றனர்)

இளங்கோ: தாழம்பூ நாம் ஒருவரையொருவர் அறிந்து நடப்பதுபோல்,நாம் ஒருவரையொருவர் மதித்தும் நடந்து கொள்ள வேண்டும்.

தாழம்பூ: இளங்கோ தங்களை மதிக்காமல் நான் எப்பொழுதாவது, எதையாவது செய்ததுண்டா?

இளங்: இப்பொழுது செய்கிறாயே!

தாழம்பூ : என்ன செய்கிறேன்?

இளங்: வரப்போகும் கல்லூரி ஆண்டு விழாவில் இசை நாடகம் ஒன்று நடத்துவோம் என்று சொன்னால், காதிலேயே வாங்க மறுக்கிறாயே!

தாழம்பூ: ஓ! அதைச் சொல்லுகிறீர்களா? உங்களை மதிக்கிறேன், கருத்தை மதிக்கிறேன், காரியத்தை மதிக்கிறேன். உங்களோடு சேர்ந்து நடிக்கவும் துடிக்கிறேன், நான்!

இளங்: பிறகேன் மெளனம் சாதிக்கிறாய்?

தாழம்:சொல்ல வேண்டியவர்களிடம் சொன்னாலல்லவோ நடக்க வேண்டியது நடக்கும்.