பக்கம்:பதினாறும் பெறுக.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

32

பரம : (வியந்து) டே டே டே டே டே! என்னடா, என்னடா, என்னடா சொன்னே? தம்பியோட பக்கத்திலே ஒருத்தியா? எங்கே? எங்கே? எப்படா பாத்தே?

முத்தன்: (வாயில் விரல் வைத்து) அதை அப்பறம் சொல்றேன். தோ! செல்வரங்கம் வர்றாரு மொதல்லே அவரைப் பாருங்க.

(செல்வரங்கம் வருகிறார், கையிலே குடையோடு)

பரம : வாங்க ஐயா வாங்க! ஒக்காருங்க. . . . செல்வ (சிரித்து) கேட்ட பணம் பத்தாயிரமும் கொண்டாந்திருக்கிறேன்.

பரம: டாய் முத்தா போய் காபி கொண்டாடா (போகிறான்) ஒங்களுக்கு நிரம்ப சிரமம் கொடுத்திட்டேன், எனக்குக் கடன் வாங்கி வழக்கமில்லே தோட்டத்து கெணத்துக்கெல்லாம் பம்பு செட்டு வச்சாகணும்னு ஒத்தைக்கால்லே நின்னுப்பூட் டானுங்க. அதனாலே வாங்கவேண்டி வந்துட்டதுங்க! இது வெளியே யாருக்கும் தெரியவேணாமுங்க!


செல்வ: அதனாலென்ன, பாதகமில்லே கொடுக்கல்வாங்கல் கோடீஸ்வர ருக்கும் உண்டுன்னு சொல்லுவாங்க. இது நமக்குள்தானே.ம். சொல்லமாட்டேன்.

(நோட்டுக்கத்தைகளை எடுத்துக்கொடுக்கிறார். எழுதிய பாண்டை எடுத்துக் கொடுக்கிறார்.)

செல்வ: இதிலே ஒரு சின்ன கையெழுத்துப் போட்டுக் குடுத்திடுங்க. தம்பி இளங்கோ எங்கே போயிட்டுது?

பரம : காலேசுக்குப் போயிருக்கான். ஏனங்க?

செல்வ: தம்பியோட பேரையும் கணக்கப்புள்ளே பாண்டிலே எழுதியிட்டான் தம்பியோட கையெழுத்தும் (பரமசிவம் கையொப்பமிடுகிறார்.)

பரம:ஐயா! நானே இதுவரை பாண்டு எழுதிக் கொடுத்துப் பணம்

வாங்கினதில்லே.இதிலே போயி இளங்கோவையும் சேர்க்கணுமா?


செல்வ: அதனாலென்ன பரமசிவம் கணக்கன் எழுதிப்போட்டான். இது நமக்குள்ளேதானே இருக்கப்போவுது. சும்மா போடச் சொல்லுங்க.

(இளங்கோ வருகிறான்)

செல்வ: தோ! தம்பி வந்துட்டாங்களே! வாங்க தம்பி வாங்க, வாங்க,நல்ல வேளையிலே வந்தீங்க,

இளங்: வணக்கம் ஐயா! என்ன விசேஷம்?

பரம: ஒண்ணுமில்லே தம்பி! எல்லாம் ஒனக்காகத்தான் பம்புசெட்டு வைக்கறதுக்காகப் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கறேன். பாண்டுல உன்னோட கையெழுத்தும் வேணும்கிறாரு.

இளங்: அதற்கென்ன! போடவேண்டியதுதானே? கொடுங்கள்.

(பாண்டை வாங்கிக் கையெழுத்துப்போட்டுக் கொடுக்கிறான் தந்தையிடம்)