பக்கம்:பதினாறும் பெறுக.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

25

செல்வ: நல்ல வேளே. நான் மாத்தரம் வந்தேன். பரமசிவம் தாழம் பூவை நம்ப இளங்கோ உண்மையிலேயே காதலிக்கிறதாகச் சொல்றாங்களே! அது பொய்தானே?

பரம : ஐயா! பொய்யாத்தான் இருக்கணும்னு நெனைக்கிறேன்.


முத்தன் : எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமோ?

செல்வ: எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருந்தாலும் சரி, கடிச்சா தீங்குதானே? அதனாலே அந்தப் பாம்பை சாகடிக்கணும். தகப்பனில்லாத வளர்ந்தவள் தாழம்பூ! அவ ஒரு பூநாகம்!


முத்தன்: இருந்தாலும் அவளோட அப்பன் ஒரு தமிழ்ப் பேராசிரியர் பாருங்க. அவுங்க நல்ல குடும்பம்!

செல்வ: என்னை விடவா? என்னோட குடும்பம் எவ்வளவு பெரிசு? சொத்து மதிப்பு என்ன தெரியுமாடா முத்தா?

முத்தன் : தெரியுமுங்க, பத்து லட்சம்!

செல்வ: (பழித்து) பத்து லட்சம்! சொச்சம் எங்கே போறது.டாய் முத்தா!

முத்தன்: எசமான்.

செல்வ: என் ஏழாவது மகளுக்கு நான் சீதனமா கொடுக்கப்போறதே ஒரு லட்சமடா! ஒரு லட்சம்! சின்ன எசமான் கிட்டே சொல்லிவை.

முத்தன்: ஆகட்டுமுங்க. சொல்லிவைக்கிறேன்.

செல்வ : பரமசிவம்! நம்ப குடும்ப சம்பந்தம் கண்டிப்பா ஏற்பாடகணும். காதல் கீதல்னு இளங்கோ எதையாச்சும் கற்பனை பண்ணி மனக்கோட்டை கட்டியிருப்பான். அதை இடிச்சாகனும்! என்னை அவமானப்படுத்தின. கமலவேணியோட கருவத்தை அடக்கியே தீரணும். என்ன சொல்றீங்க?

பரம: ஆகட்டுங்க. ஒங்க மனம் போலவே செய்வோம். ஒங்க மகளைப்போல என் மகனும் சீரும் சிறப்புமா வாழனும்னுதான் நானும் நெனைக்கிறேன். அது தானே தகப்பனோட கடமையும்?

செல்வ : பலே! பரமசிவம்! அப்படிச் சொல்லுங்க. நம்ப இளங்கோ அந்தச் சிறுக்கியைத்தான் கட்டிக்கவேன்னா நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

(செவியில் ரகசியமாக ஏதோ சொல்கிறார்)


பரம : ஆகட்டுங்க. அப்படியே செய்யறேன்.

செல்வ: ஆமா. மறந்திடாதீங்க. நான் வரட்டுமா? சீக்கிரமா நிச்சய தாம்பூலம் நடத்திடுவோம் பரமசிவம் நாள் கடத்தா தீங்க. நான் வர்றேன்.

பரம : நல்லதுங்க.

(அவர் போகிறார்)

முத்தன் : உம் எந்தப் புத்திலே எந்தப் பாம்போ?

பரம: டாய் முத்தா! ஏண்டா எப்பப்பாத்தாலும் பாம்பைப் பத்தியே பேசறே?

முத்தன் : இங்கே அதோட நடமாட்டந்தானே கண்ணை உறுத்துதுங்க!

பரம: கண்ணையும் உறுத்தவேணாம், காதையும் கிழிக்க வேணாம்

போய் வேலையைப் பாரு!

(போகிறான் முத்தன்)