பக்கம்:பதினாறும் பெறுக.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34



சுந்தர: (வருந்தி) அப்பா....அப்பா. . . . .

இளங் : (அவனை அணைத்து) தம்பி! பேசாமலிரு. உன்னை நான் ஆதரிக் கிறேன். உன்னை என் தம்பி போல நடத்துவேன், கவலைப் படாதே! என்னோடு வா!

முத்தன்: நல்லதுங்க அப்படி வேணைமானா செய்யுங்க. (அவர்கள் போகின்றனர்)

மரம! (சினந்து டாய் முத்தா இந்தப் பயல் எப்படி வந்தான்? எதுக்கு

வந்தான்? என் வந்தான்?

முத்தன். இது உங்களோட எளய தாரம் மாலதியம்மாவைக் கேட்க

வேண்டிய கேள்வி!

பரம: (சினந்து) டாய் முத்தா!அந்தப்பையன் எப்படி வந்தான்? எதுக்கு வந்தான் ? ஏன் வந்தான் ?

முதாதன்:இது உங்களோட எளைய தாரம் மாலதியம்மாவ கேட்க வேண்டிய கேள்வி


பரம:ஆங்! என்னடா சொன்னே! மாலதி எனக்கு எளையதாரமா? எளைய தாரமா?

முத்தன்: பதராதீங்க எசமான்! என்னைக்கிருந்தாலும் ஒரு நாள் இது அப்படித்தான் முடியும். எப்படியோ பய என்னைத் தேடிகிட்டு ஒங்க வீட்டுக்கே வந்துட்டான், சின்ன எசமா னும் பார்த்திட்டாரு. அவுருக்கு ஏற்கெனவே இருந்த சந்தேகம் வலுத்துப் போச்சு. சின்னப்பயலும் எல்லாத் தையும் சொல்லிடப் போறான். எப்படியும் இனியும் விஷயத்தை மூடிவைக்க முடியாதுங்க, எசமான் கெளரவ மாக நடந்துக்க வேண்டியதுதான்.

பரம:அப்படின்னா, எனக்கு வைப்பாட்டியா வந்தவளை எளையதாரமா ஏத்துக்கச் சொல்றியாடா?

முத்தன். நீங்க பெரியவங்க. அதை நீங்களாக கவுரவமா செய்யணும் எசமான்!

பரம: முடியாது! அவளை ஏதாவது பனங்காசு, கொடுத்துக் கழிச்சுப் போடுவேனே தவிர கட்டிய மனைவியா ஏத்துக்கவே முடியாது.

முத்தன்: கொழந்தைங்க இருக்குது எசமான்?

பரம: கொஞ்சம் அதிகமா பணம் கொடுக்கறேன் வாங்கிகிட்டுத் தொலையட்டும்!

முத்தன்: எசமான் பணத்தை வச்சே எல்லா காரியத்தையும் சாதிக்க லாம்னு சொல்றவரு சொல்வாங்க அந்த வழி நமக்கு வேணுமுங்க. நியாயம், நடத்தை, நீதி, நேர்மைகளைக் காப்பாத்தனுமுங்க!

பரம: அப்ப, நீதான் சுந்தரத்தை இங்கே வரச் சொன்னியா?

முத்தன்: ஐயோ எசமான் இல்லவே யில்லை, சத்தியமா நான் சொல்லலே, காய்ச்சலுக்கு மருந்து வாங்க என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் எசமான்!

பரம: (குழம்பி) காய்ச்சல், அவளுக்கல்லடா, எனக்கல்லவா காய்ச்சல் வந்திருக்குது ஐயோ!

(தலையில் கை வைக்கிறார்)