பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பதினெண் புராணங்கள் செலுத்தி வளர்த்தான். துரதிருஷ்டவசமாக அக்கிளியை ஒரு பூனை கொன்று விட்டது. எல்லை மீறிய துயரம் அடைந்த தர்ம சர்மா ஒயாது கிளியையே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் சாக நேர்ந்த பொழுது கூட கிளியின் நினைவாகவே இறந்தான். கிளியின் நினைவோடு இறந்ததால் மறுபிறப்பில் கிளியாகப் பிறந்தான். அந்தக் கிளி வேறு யாருமல்ல, நான்தான் என்று தந்தைக் கிளி குஞ்சலா, சாயவனனிடம் சொல்லி முடித்தது. விஷ்ணுலோகம் சென்ற எலியின் கதை திரேதாயுகத்தில் ஒரு விஷ்ணுவின் கோயிலில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஊரில் வாழும் ஒரு பக்தன் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி விட்டுப் போனான். அவன் போனபிறகு திரி கொஞ்சம் மங்கி எரிந்தது. ஆனால் விளக்கில் இருந்து நெய் வாசம் வெகுதூரம் பரவியது. இந்த வாசனை யால் இழுக்கப்பட்ட எலி, மெல்ல வந்து விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க ஆரம்பித்தது. அதன் பயனாக திரி சற்று உயரத்திற்கு வர திடீரென்று அதிக வெளிச்சம் பரவியது. இந்த அதிக வெளிச்சத்தால் விஷ்ணுவின் சிலை. பளிச் சென்று தெரிய ஆரம்பித்தது. சிலையைச் சுற்றியிருந்த இருள் அகன்றது. காலாந்திரத்தில் விளக்கில் இருந்து நெய்யைக் குடித்துச் சென்று எதிர்பாராமல் திரியைத் துண்டிச் சென்ற எலியை ஒரு பாம்பு கடித்து இறந்தது. யம தூதர்கள் வந்து எலியின் ஆவியைக் கட்டி இழுத்துக்கொண்டு யம லோகம் செல்லப் புறப்பட்டனர். திடீரென்று விஷ்ணுவின் பணியாளர் பலர் அங்கே வந்தனர். எமபடர்களைப் பார்த்து, நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்! இந்த எலி ஒருநாள் கோயிலுக்குள் இருக்கும் விளக்கைத் தூண்டி, விஷ்ணுவின் சிலைக்குமேல் அதிகமாக ஒளி படரச் செய்தது. இந்தத் தொண்டினால் அது