பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 77 நினைத்த பணியாளர்கள் விசுவாமித்திரரை அழைத்துப் போக மறுத்துவிட்டனர். என்றாலும், விசுவாமித்திரர் அரசனிடம் சென்று நரபலி இடுவது தேவையில்லாத ஒன்று என்று விளக்கிக் கூறித் தானே ஒரு யாகத்தைச் செய்து அவனுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்க வழி செய்வதாகக் கூறினார். தான் கூறியபடியே ஒரு யாகத்தைச் செய்து முடித்தார், விசுவா மித்திரர். குழந்தை பிறந்தது. பலிக்காக அழைத்து வரப்பட்டவன் பெற்றோரிடம் திரும்பிச் சென்றான். அவன் வரவைக் கண்ட மகிழ்ச்சியில் திளைத்ததால், பெற்றோரின் கண்பார்வை மீண்டு விட்டது. விசுவாமித்திரர் ஒரு மாபெரும் முனிவர் என்பது விளங்கி விட்டது. பத்ம புராணத்தின் இறுதிப் பகுதி பலப்பல குட்டிக் கதைகளைப் பேசுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்களைப் பேசுகிறது. இக்கதைகளில் ஒரு பொதுத்தன்மை காணப் படுகிறது. விரதம் இருப்பதின் சிறப்பை அறிந்து அதை மேற்கொண்டாலும், எதிர்பாராதவிதமாக அன்று ஏகாதசி என்று கூடத் தெரியாத நிலையில் பட்டினி இருந்தாலும், இரண்டு சாராரும் விஷ்ணுலோகம் செல்கின்றனர் என்பதே இக் கதைகளின் பொதுத்தன்மை. அடுத்துள்ள சில கதைகள் விஷ்ணு பக்தி என்று தனியே இல்லாவிட்டாலும், விஷ்ணுவிற்கு அபிஷேகம் செய்த தண்ணீரைக் குடித்த காக்கை விஷ்ணுலோகம் சென்றது. அதிக தாகத்தினால் துளசிச் செடியில் நிறைந்திருக்கின்ற தண்ணிரைக் குடித்த சண்டாளன் விஷ்ணுலோகம் போனான் என்பன போன்ற கதைகள் அமைந்துள்ளன. இந்தக் கதைகள் துவாபர யுகத்திலும், திரேதாயுகத்திலும் நடந்தவை என்று பத்ம புராணம் கூறிச் செல்கிறது.