பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பதினெண் புராணங்கள் சொல்லிற்று. நான்முகன் அழுகின்ற குழந்தைக்கு 'ருத்திரன்' என்று பெயரிட்டார். சிலநேரம் மகிழ்ச்சியாக இருந்த குழந்தை மறுபடியும் அழத் துவங்கியது. நான்முகனால் அவ்வழுகையை நிறுத்த முடியவில்லை. முன்னமும் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்றுதானே இந்தக் குழந்தை அழுதது. எனவே புதுப்புதுப் பெயராக பிரம்மன் பெயர் சூட்டினார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ஏழாவது பெயர் சூட்டப்பட்டவுடன்தான் குழந்தையின் அழுகை நின்றது. பிரம்மன் ருத்திரனுக்கு சூட்டிய ஏழு பெயர்கள் வருமாறு: பவ, சர்வ, மகேச, பசுபதி, பீம, உக்ர, மகாதேவ என்பனவாம். உருத்திரன், சதி என்பவளை மணந்து கொண்டான். சதியின் தந்தையாகிய தட்சன் செய்த யாகத்தில் உருத்திரனை அவமானம் செய்ததால் சதி உயிரை விட்டு, மறுபடியும் உமா என்ற பெயருடன் இமயமலை மகளாகப் பிறந்தாள். அவளை விரும்பி ருத்திரன் மணந்து கொண்டார். இலக்குமியின் தோற்றம் முன்னொரு காலத்தில் மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுவதிலும் சுற்றித் திரிந்தார். ஒருமுறை ஒரு அழகிய பெண், வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள். அம் மாலையில் விருப்பம் கொண்ட துர்வாசர் அம்மாலையைக் கேட்டார். அப்பெண் மகிழ்ச்சியுடன் அம்மாலையை துர்வாசருக்குத் தந்தாள். அவள் தந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு பலவிடங்களிலும் சுற்றித் திரிந்தார் துர்வாசர். ஒருமுறை தன்னுடைய யானையாகிய ஐராவதத்தில் எதிர்கொண்டு இந்திரன் ஊர்வலம் வந்தான். துர்வாசர் தன்னுடைய தலையில் இருந்த அந்த மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார். அதன்