பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பதினெண் புராணங்கள் புகையைக் கக்கிற்று. அது ஆகாயத்தில் சென்று மழையாய்ப் பெய்தது. கடையும் பொழுது முதலில் சுரபியும் (பசு), அடுத்து வருணி என்ற தேவதையும், தொடர்ந்து பாரிஜாதமாயும் அடுத்து அப்ஸ்ரஸ்களும் அடுத்து சந்திரனும் வந்தான். இவற்றோடு பல தீய பொருட்கள் தோன்றின. இதன் பிறகு தன்வந்திரி அமுத கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தான். தேவர்களும் அசுரர்களும் ஒருசேர மகிழ்ந்தனர். தன்வந்திரியை அடுத்து அழகிய தாமரைப்பூவில் ஒளி பொருந்திய இலக்குமி கையில் ஒரு தாமரை மலரை ஏந்திக்கொண்டு தோன்றினாள். திசை யானைகள் எட்டும் இலக்குமிக்கு அபிஷேகம் செய்தன. விஸ்வகர்மா இலக்குமிக்கு ஏற்ற ஆபரணங்களைச் செய்து வந்தார். இலக்குமி விஷ்ணுவைத் தழுவிக் கொண்டதாலும், தேவர்களைப் பார்த்துப் புன்சிரிப்புச் செய்ததாலும் இலக்குமி யின் கிருபை தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. இது நடை பெறுகின்ற நேரத்தில் தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தை அசுரர்கள் பறித்துக் கொண்டனர். ஒன்றும் செய்ய இயலாது தேவர்கள் கலங்கி நிற்கையில் விஷ்ணு ஒரு பெண் வடிவுடன் சென்று அசுரர்களை மயக்கி, அமுத கலசத்தைக் கொண்டு வந்து தேவர்கள் உண்ணுமாறு செய்தார். அமிர்தம் உண்ட தேவர்கள் அதிக பலம் பெற்று அசுரர்களை விரட்டியடித்தனர். பிறகு இலட்சுமியை வணங்கிய இந்திரன் சில வரங்களைப் பெற்றுக் கொண்டான். முதலாவது, இலக்குமி தேவருலகம் முதலியவற்றை விட்டுப் பிரியக் கூடாது. இரண்டாவது, யார் இலக்குமியைப் போற்றி வழிபட்டாலும் அவள் அவர்களுக்கு அருள் தர வேண்டும். துருவனின் கதை பிரம்மாவின் உடம்பிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் தோன்றினர். மனு என்ற பெயரைப் பெற்றிருந்த அவர்கள்