பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 99 மேற்கொள்ள வேண்டும். முதலாவது நிலை பிரம்மசரியம். பூணுால் அணிந்தவுடன் குருவை நாடிச் சென்று அவருடனேயே தங்கி, அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தல், குரு உறங்கிய பின் உறங்கி, அவர் எழுமுன் எழுந்து காலைக் கடன்களை முடித்து மலர் தண்ணர் முதலியவற்றைக் கொண்டு வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குருவை மறுத்துப் பேசவோ, எதிர்க்கவோ கூடாது. எல்லாச் சாத்திரங்களையும் கற்ற பிறகு குருதட்சணை கொடுத்துவிட்டு அவரது உத்தரவின்பேரில் கிரகஸ்தனாக ஆக வேண்டும். இதுவே இரண்டாவது நிலை. கிரகஸ்தனானவன் தக்க ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து இல்லறம் நடத்த வேண்டும். புதல்வரைப் பெறுதல், வேள்வி செய்தல், மேலும் கற்றல், விருந்தினர்களை உபசரித்தல் ஆகியவை இதன்பாற்படும். மற்ற நிலைகளைக் காட்டிலும் கிரகஸ்தனின் நிலையே உயர்ந்த தாகும். பிராமணர்களும், பிரம்மசாரிகளும் பிச்சை ஏற்பதை மேற்கொள்ளலாம். மூன்றாவது நிலை வானபிரஸ்தம். நிறைவான வாழ்க்கைக்குப் பிறகு ஒருவன் காட்டிற்குச் சென்று தவம் செய்யலாம். அவ்வாறு செல்லும்போது மனைவியை அழைத்துக் கொண்டோ அல்லது மகனின் பாதுகாப்பிலோ விட்டுச் செல்லலாம். வானப்பிரஸ்தர்கள் காய் கனி கிழங்குகளை உண்டு, முடியினை வெட்டாது இருத்தல் வேண்டும். தெய்வங்களை வழிபடுவதோடு தன்னை நாடி வரும் விருந்தினர்களுக்குத் தன்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டும். அவனுடைய தலையாய கடமை தியானம் செய்வதே யாகும். கடைசி நிலையாக வருவது சந்நியாச நிலையாகும். பந்த பாசங்களை விட்டுவிட்டு, நிலையில்லாத உலகப் பொருட் களின் மீதுள்ள ஆசையினையும் துறந்தவனே சந்நியாச நிலையினை ஏற்க முடியும். சந்நியாசியைப் பொறுத்தவரை எல்லா ஜீவன்களுமே ஒன்றுதான். அவற்றிற்கு எந்தத் தீங்கும்