பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii பல மாறுதல்களைப் பெற்றுள்ளது. இவ்வேதத்தின் நான்காவது பிரபாடகத்தின் கடைசியில் வரும் பூரீருத்ரம் கூட சுக்கில யஜூரில் பல் மாறுபாடுகளுடன் விளங்கக் காணலாம். இதனால் இப்புராணங்களில் காணப்படும் மாறுபாடுகளைப் பெரிதாக நினைக்க வேண்டியதில்லை. வரலாற்று ஆராய்ச்சிக் கண்கொண்டு இப்புராணங் களை ஆராயாமல், இந்நாட்டின் கலாச்சாரத்திற்கு அஸ்திவாரமாக உள்ளவை இப்புராணங்கள் என்று மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுளரைச் சுற்றியே இப்புராணங்கள் பேசுகின்றன. பிரம்மம் என்று சொல்லப்படும் பரப் பிரம்மத்தைப் பற்றி நிர்குணப் பிரம்மம்) எல்லாப் புராணங் களும் தொடக்கத்தில் சில பாடல்களைப் பாடுகின்றன என்றாலும் புராணத்தினுள் திரிமூர்த்திகளே அதிக இடம் பெறுகின்றனர். இவர்கள் தனித்தனியே பேசப்படும் பொழுது அவரவர்களே மூவரிலும் முதல்வர் என்று பேசப் படுகின்றனர். என்றாலும் பல புராணங்களில் இவர்கள் மூவரும் ஒரே கடவுளின் மூன்று வடிவங்கள் என்றும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்வதால் மூன்று பெயர்களால் வழங்கப்படுகின்றனர் என்றும் பேசுவதைக் காணலாம். இவர்களுள் வேறுபாடு கற்பித்து, ஒருவருக்குக் கீழ்ப்பட்டவர் மற்றவர்கள் என்று பேசுமிடங்கள் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லா இடங் களிலும் மூவரையும் ஒருமைப்படுத்திப் பேசுவதைக் காணலாம். பிற்காலத்தில் காணப்படுவது போல சைவ, வைணவ வேறுபாடுகளும் போராட்டங்களும் இப்புராணங் களில் இல்லை. ஒருவகையாக நோக்குமிடத்து சைவ, வைணவ ஒருமைப்பாட்டிற்கு இப்புராணங்கள் பெரிதும் உதவியுள்ளன என்பதை அறியலாம்.