பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பதினெண் புராணங்கள் சென்றதை அறிந்தனர். அவர்களும் கீழுலகம் செல்ல, குதிரை ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருப்பதையும், அதனருகில் கபிலர் என்ற முனிவர் அமர்ந்திருப்பதையும் கண்டார்கள். அறிவு குறைந்த இப்பிள்ளைகள் முனிவர்தான் குதிரையைத் திருடினார் என்று நினைத்து அவர்மேல் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். முனிவரிடத்திலிருந்து புறப்பட்ட தீப்பிழம்பு பிள்ளைகள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. இதை அறிந்த சகரன், தன் மூத்த மனைவியின் மகனாகிய அசமஞ்சனின் பிள்ளையைக் கபில முனிவரிடம் அனுப்பினான். அமுஷ்மணன் என்ற அந்தப் பிள்ளை கபில முனிவரிடம் சென்று வணங்கி மிக்க வினயத்துடன் தன்னுடைய தந்தை, சிறிய தந்தைகள் ஆகிய அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வழிசொல்லுமாறு வேண்டிக் கொண்டான். அவன்மேல் இரக்கம் கொண்ட கபிலர் உங்களுடைய பரம்பரையில் ஒரு மன்னன் வரப்போகிறான். அவன் பாகீரதி என்று சொல்லப்படும் கங்கையை தேவ லோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வருவான். இவர்கள் எரிந்த சாம்பலின் மேல் கங்கைத் தண்ணிர் பட்டவுடன் இவர்கள் அனைவரும் மோட்சம் போவார்கள் என்று கூறினார். பகீரதன் பரம்பரையில் வந்தவர்களே இராம, இலட்சுமண, பரத சத்ருக்னன் ஆவர். - ஜனக மன்னனின் கதை இட்சுவாகுவின் மகனாகிய நிமி ஒரு யாகம் செய்தான். இது ஆயிரம் வருடங்கள் நடைபெற்றது. நிமி ஆயிரம் வருடங்கள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தைச் செய்ய விரும்பினான். அதற்கு வசிட்டனை ஆச்சார்யனாக வர வேண்டுமென்று கேட்டான். ஐந்நூறு வருடங்கள் நடைபெறும்