பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பதினெண் புராணங்கள் உடலைப் பொடி செய்தார்கள். அந்தப் பொடியிலிருந்து தோன்றிய பிள்ளைக்கு ஜனகன் என்று பெயர் வந்தது. அவன் தந்தைக்கு உடம்பு இல்லாததால் ஜனகனுக்கு வைதேகன் என்ற பெயரும் வந்தது. ஜனகன் யாகம் செய்வதற்காகப் பூமியை உழுதான். உழுபடைச்சாலில் இருந்து ஒரு பெண் மகவு வெளி வந்தது. அப்பெண்ணே சீதையாவாள். விசுவாமித்திரர், ஜமதக்கினி கதை ஜானுவின் மகனான கதி என்ற அரசனுக்குச் சத்தியவதி என்ற மகள் பிறந்தாள். ரிஷிகா என்ற முனிவன் சத்தியவதியை மணந்து கொள்ள விரும்பினான். ஒரு கிழட்டு முனிவனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத கதி அதை நேரிடையாகச் சொல்ல அஞ்சினான். எனவே உடம்பு முழுவதும் வெள்ளையும், கரிய நிறமுடைய காதுகளும் உடைய ஆயிரம் குதிரைகளைப் பரிசாகத் தந்தால் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினான். முனிவனால் குதிரைகளைச் சேகரிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் அரசன் இதைச் சொன்னான். ஆனால் முனிவன் வருணனை வேண்டி இந்த ஆயிரம் குதிரைகளையும் பெற்றுவிட்டான். குதிரைகளைக் கண்ட மன்னன் வேறு வழியில்லாமல் தன் மகளை முனிவன் ரிஷிகாவிற்கு மணம் செய்து கொடுத்தான். சத்தியவதி தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டுமென்று முனிவனைக் கேட்டுக் கொண்டாள். முனிவர் ஒரு யாகம் செய்து அதில் கிடைத்த ஒரு கிண்ணம் பாயசத்தைச் சத்திய வதியிடம் தந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சத்திய வதியின் தாயார் தனக்கும் ஒரு ஆண் மகவு வேண்டும் என்று மருமகனிடம் வேண்டிக் கொண்டார். மறுபடியும் ஒரு கிண்ணம் பாயசத்தை வரவழைத்த முனிவர் இரண்டு கிண்ணங்களையும் சத்தியவதியிடம் கொடுத்து. இது உன்