பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பதினெண் புராணங்கள் தன்னுடைய தோழர்களை அழைத்து, என்னுடைய ஆற்றலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னுடன் போர் தொடுக்க முடியாமல் இந்திரன் ஓடிய ஒட்டத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை. இருந்தாலும் முன் ஜாக்கிரதையாக இப்பொழுது மதுராவில் பிறந்துள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று விடுவோம்’ என்று கூறினான். என்னுடைய குருவாகிய ஜராசந்தனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், வணக்கம் செய்யவும் மாட்டேன்’ என்று கூறி மகிழ்ந்தான். பாலகிருஷ்ணன் லீலைகள் இதன் பிறகு பாலகிருஷ்ணனும் பலராமனும் கோகுலத்தில் வளர்ந்த வரலாறும், பூதனை என்ற அரக்கி கிருஷ்ணனுக்குப் பாலூட்ட முயன்று இறந்ததும், சகடம் உதைத்ததும், கன்றால் விளாங்கனி அடித்ததும் ஆகிய கிருஷ்ண லீலைகள் விஷ்ணு புராணத்தில் இந்தப் பகுதியில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யசோதை தாமு என்று வடமொழியில் பெயர் கூறப்படும் கயிற்றினால் கண்ணனைக் கட்டிப் போட்டதால் தாமோதரன்' என்ற பெயர் கிருஷ்ணனுக்கு வழங்கலாயிற்று. காளிங்க நர்த்தனம் காளிங்க நர்த்தனக் கதையை விஷ்ணு புராணம் வேறு வகையாகச் சொல்லிச் செல்கிறது. முன்னொரு காலத்தில் கருடனால் கொல்லப்பட்ட காளிங்கன் என்ற பாம்பு கடலை விட்டுவிட்டு யமுனையில் குடிபுகுந்தது. ஒரு பகுதியில் காளிங்கனும், அதன் குடும்பமும், உறவினர்களும் ஒரு மடுவில் வசித்ததால் யமுனையின் அப்பகுதி நீர் முற்றிலும் விஷமாக மாறிவிட்டது. இந்த நிலையில் கிருஷ்ணன் நீருக்குள் புகுந்தான். காளிங்கனும் மற்ற பாம்புகளும் கிருஷ்ணன் உடலைச் சுற்றிக் கொண்டு அவனைக் கடிக்கத் துவங்கின. நந்தன், யசோதா,