பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 119 பலராமன் இதைப் பார்த்துக் கதறினர். எல்லோரும் துயரத்தின் எல்லையை அடைந்த பொழுது, பலராமன் கிருஷ்ணா! விளையாட்டு போதும், சீக்கிரம் அவற்றை அழித்துவிட்டு வா' என்றான். உடனே கிருஷ்ணன் எல்லாப் பாம்புகளையும் அழித்து, காளிங்கன் தலையில் ஏறி நடனமாடி அதன் உயிரைப் போக்கும் நிலைக்குக் கொண்டுவந்தான். காளிங்கனும், அவன் மனைவிமார்களும் வேண்டிக் கொண்டதால் கிருஷ்ணன் அவர்களை மன்னித்து, யமுனையில் இனி நீங்கள் தங்கக் கூடாது; கடலுக்கு ஓடிவிடுங்கள்!” என்று ஆணையிட்டு விடுதலை செய்தான். கிருஷ்ணன் பாம்பின் படத்தின்மேல் ஆடியதால் அந்தப் பாதத்தின் சின்னம் எல்லா நாகங்களின் படத்திலும் அமைந்து விட்டதால் அதைப் பார்த்த கருடன் அவற்றை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான். பாகவதம் முதலியவற்றில் கன்றுக்குட்டி வடிவில் கண்ணனைக் கொல்ல வந்த அசுரனை அக்கன்றின் காலைப் பிடித்து சுழற்றி விளாமரத்தின் மேல் எறிந்து விளாங்காய் களை உதிர்த்தான் என்று பேசப்படுகிறது. அந்தக் கதை விஷ்ணு புராணத்தில் சில மாற்றங்களுடன் தரப்பட்டுள்ளது. தேனுகா என்ற அசுரன் கழுதை வடிவு கொண்டு விளா மரங்களைக் காவல் செய்தான் என்ற வேறுபாட்டுடன் அதே கதை பேசப்படுகிறது. கிருஷ்ணனும் பலராமனும் அவன் நண்பர்களும் ஒட்டப் பந்தயம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்தயத்தில் தோற்றவர் வென்றவரைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது பந்தய ஏற்பாடு. பிரலம்பா என்ற அசுரன் கிருஷ்ணன், பலராமன் இருவரையும் கொல்ல வந்து ஆயர்பாடிச் சிறுவர்களைப் போல் அவர்களுடன் சேர்ந்து விளையாடினான். ஒட்டப்பந்தயத்தில் தோற்றதால் பலராமனை