பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Xiy இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுத்தன்மை (integrated whole) என்பதை அறிதல் வேண்டும். ஒன்றை யொன்று எவ்வளவு சார்ந்துள்ளன, ஒன்றை ஒன்று எவ்வளவு பற்றி நிற்கின்றன என்பதை அறிவுறுத்துவதே புராணங்களின் உள்நோக்கமாகும். ஐந்தாவதாக உள்ள அரச பரம்பரையினரின் வாழ்க்கை பற்றிப் பேசும் புராணப் பகுதிகளிலிருந்து மற்றொன்றையும் காணமுடியும். தம்மால் ஆளப்பெறும் மக்களின் நலங் கருதியே இந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஒருவர். இருவர் இதற்கெதிராகத் தன்னலத்தைப் பெரிதாக்கி மக்களுக்குத் தீங்கிழைக்கும் ஆட்சிமுறையைக் கையாண்டால் முனிவர்கள் முதலானவர்கள் அந்த அரசனுக்கு புத்தி புகட்டுவதும், அந்த உபதேசம் பயன்படாத பொழுது அந்த அரசனையே கொன்று விடுவதும் இப்புராணங்களில் காணக் கிடைக் கின்றன. இப்புராணங்கள் தோன்றுவதற்குரிய காரணங் களும் அறியப்பட வேண்டும். பிரபஞ்சத்தின் தோற்றம், அழிவு, மறு உற்பத்தி, கிருஷ்ணன் போன்ற மகாத்மாக்களின் வரலாறு ஆகியவை கற்றவர், கல்லாதவர், செல்வர், வறியர், உயர்குலத்தோர், தாழ்குலத்தோர் ஆகிய அனைவராலும் அறியப்பட வேண்டும். வேதம் போன்றவை பிராமணர் களுக்கே உரியவை என்று பிற்காலத்தில் வரையறை செய்யப்பட்டபின் எல்லோரும் அறிவு பெறக்கூடிய வாய்ப்பே தடை செய்யப்பட்டுவிட்டது. அந்நிலையில் மேலே கண்டவற்றைப் பொதுமக்களுக்கு குறிப்பாக சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்குங்கூட இவற்றைப் பற்றிச் சொல்ல புராணங்கள் பயன்பட்டன. இதுபற்றிப் பேசவந்த வாயு புராணம் 33, 34 பாடல் களில் சொல்லும் செய்தியைக் கருத்தில் கொள்வது நலம். அக்கால மெய்ஞானிகள் அரசர்களின் அவைகளில் பணி