பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 121 உதிர்த்துக் கேசியை சாகடித்தான். அதனால் கிருஷ்ணனுக்குக் கேசவன் என்ற பெயர் வந்தது. இவற்றையெல்லாம் அறிந்த கம்ஸன் சனுரா, முஷ்டிகா என்ற இரண்டு மல்லர்களைத் தயார் செய்து கிருஷ்ண, பலராமனைக் கொல்ல முடிவு செய்தான். அது வெளியில் தெரியாமல் இருக்க யாகம் செய்வதாக எல்லோருக்கும் சொல்லி, அக்ருவர் மூலம் கிருஷ்ண பலராமன் இருவரையும் மதுராவிற்கு வரவழைத்தான். கிருஷ்ண பலராமர்கள் இரண்டு மல்லர்களையும் சாகடித்ததோடு 'குவலயாபீடம் என்ற கம்ஸனுடைய யானையின் கொம்புகளை உடைத்துக் கொன்று விட்டனர். மதுராவிற்குள் நுழைந்த பலராமனும் கிருஷ்ணனும் கம்ஸனின் சலவைத் தொழிலாளர்களைக் கொன்று அவரிடம் இருந்த சிறந்த உடைகளைப் பறித்து அணிந்து கொண்டனர். கம்ஸனுக்கு வாசனைச் சந்தனம் அளிக்கும் கூன் விழுந்த அழகிய பெண்ணின் கூனை நிமிர்த்தினர். மல்லர்களை முறியடித்த பின் கிருஷ்ணன் மேடை மீது ஏறிச் சென்று கம்ஸனின் முடியைப் பிடித்து உலுக்கி கையால் அவனைக் குத்திக் கொன்றுவிட்டான். இறந்த கம்ஸனின் உடம்பை அந்த விளையாட்டு அரங்கத்திலேயே புதைத்து விட்டனர். கம்ஸன் இறந்ததனால் அவனால் சிறை வைக்கப்பட்டிருந்த அவன் தந்தை உக்கிரசேனர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கம்சவதம் முடிந்த பிறகு, பலராமனும் கிருஷ்ணனும் சாந்தீபன் என்ற முனிவரிடம் கல்வி கற்கச் சென்றனர். பல ஆண்டுகள் கற்க வேண்டியதை 64 நாட்களில் கற்றுக் கொண்ட அவர்கள் குருதட்சணையாக சாந்திபனுக்குப் பல காலத்திற்கு முன்னர் இறந்துபோன அவருடைய மகனை மீட்டுத் தந்தனர். இந்த மகனை மீட்க கடலின் அடியில் பஞ்சஜன்யன் என்ற