பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - - பதினெண் புராணங்கள் மகனாகிய சம்பாவிற்குப் பெண் வேஷமிட்டு அம் முனிவரிடம் அழைத்துச் சென்றனர். அவர்களைப் பார்த்து முனிவர்களே! இப்பெண்ணுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா?’ என்று கேட்டனர். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் இத்திமிர் பிடித்த செய்கையைக் கண்டு, "இவள் பெண் அல்ல, ஆண் இவனுடைய உடம்பில் இருந்து ஒர் இரும்பு உலக்கை தோன்றப் போகிறது. அந்த உலக்கை யாதவ சமுதாயத்தை அழிக்கப் போகிறது” என்று கூறினார். பயந்து போன இளைஞர்கள் அரசர் உக்கிரசேனரிடம் சென்று முறையிட்டனர். முனிவர்கள் சாபத்தை ஒன்றும் மீறமுடிய வில்லை. உரிய காலத்தில் சம்பாவின் உடலில் இருந்து ஒர் இரும்பு உலக்கை வெளியாயிற்று. அரசன் உக்கிரசேனன் அதைக் கண்டு பயந்து அந்த இரும்பு உலக்கையைப் பொடிப் பொடியாகத் தூள் செய்து சமுத்திரக் கரையில் தூவி விட்டான். முழுவதும் பொடியானாலும் ஒரு சிறு பகுதியைப் பொடி செய்யவே முடியவில்லை. அந்தச் சிறு துண்டைக் கடலுக்குள் வீசி எறிந்து விட்டான். கடற்கரையில் தூவப்பட்ட அச்சிறு துகள்கள் மிகக் கூர்மையான- வலிமையுடைய கோரைகளாக முளைத்தன. அக்கோரைகள் முளைத்த இடத்தில் பிரபஸ்சா என்ற க்ஷேத்திரம் அமைந்திருந்தது. ஒருமுறை யாதவர்கள் அனைவரும் இந்த ஸ்தலத்தில் வழிபாட்டிற்காகக் கூடினர். இவர்களுள் ஒருவனான உத்தவா என்பவன் மட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் “கந்தமாதனம்' என்ற மலையில் தவஞ்செய்யச் சென்று விட்டான். அவனைத் தவிர கூடியிருந்த யாதவர்கள் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்துக் களித்தனர். எல்லை மீறிக் குடித்ததன் விளைவாக அறிவை இழந்து தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினர். கைச்சண்டை முற்றி இரும்புப் பொடியில் இருந்து முளைத்த கோரையைப் பிடுங்கி ஒருவரை