பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 131 கடவுளை ஒருவரும் வழிபட மாட்டார்கள். குரு சிஷ்யர் களுக்கிடையே உள்ள உறவு முறிந்துவிடும். தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆவான். பெண்கள் கூந்தலை அழகு செய்வதிலேயே காலம் தள்ளுவர். பணம் பாதாளம் வரை பாயும். பணத்தைப் பிறர் பொருட்டுச் செலவு செய்யாமல், செல்வந்தர்கள் தன்னலத்திற்கே அதைப் பயன்படுத்துவார்கள். பணத்தை அறவழிகளில் சம்பாதிக்காமல் தீய வழிகளிலேயே சேர்ப்பார்கள். ஆண்கள் சாப்பிடுமுன் குளிக்கக்கூட மாட்டார்கள். ஆண்களும், பெண்களும் குட்டையாகி விடுவர். பெண்கள் கணவனுக்குப் பணிந்து நடக்க மாட்டார்கள். அரசர்கள் குடிமக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். அதற்கு பதிலாக வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொள்வர். இளமையிலேயே முதுமை அடைவர். யாரும் விஷ்ணுவை வணங்க மாட்டார்கள். சத்திய யுகத்தில் பத்து ஆண்டுகள் தவம் செய்து பெறும் பயனை- திரேதாயுகத்தில் ஒர் ஆண்டிலும், துவாபரயுகத்தில் ஒரு மாதத்திலும், கலியுகத்தில் ஒரு நாளிலும் தவம் செய்து அதே பலனை அடைய முடியும். இதுவே கலியின் சிறப்பு அம்சமாகும். பிரளயங்கள் மூன்று வகையான பிரளயங்கள் உண்டு. முதலாவது பிரளயம், பிரம்மனுடைய ஒரு நாள் கழிந்தவுடன் நடைபெறுவ தாகும். இதற்கு நைமித்திக்க பிரளயம் என்று பெயர். இந்தப் பிரளயம் தொடங்குவதற்கு முன்னர் நூறு ஆண்டுகள் மழை என்பதே இல்லை. இப்பொழுது விஷ்ணு ருத்ர சொரூபம் எடுத்து ஆறு, கடல் எல்லாவற்றிலும் உள்ள நீரைக் குடித்து விடுவார். சூரியனுடைய ஏழுவகைப்பட்ட கிரணங்களும் தனித் தனியாக ஒரு சூரியன் போல் இருந்து நிலத்தைக் கொளுத்தும்.