பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பதினெண் புராணங்கள் இந்தச் சூரிய கிரணங்கள் இந்த பூலோகத்தை அல்லாமல், யுவர், புவர், சுவர் ஆகிய மூன்று லோகத்தையும் கொளுத்தி விடும். இதன்பிறகு கரிய மேகங்கள் சூழ்ந்து நூறு வருடங்கள் வரை விடாது மழை பெய்யும். மறுபடியும் உலகம் தோற்றுவிக்கப்படும் வரை விஷ்ணு தண்ணிரின்மேல் மிதந்து உறங்கிக் கொண்டிருப்பார். இரண்டாவது பிரளயம், பிரகிருத பிரளயம் எனப்படும். தாமசம், ராஜசம், சத்துவம் ஆகிய மூன்று குணங்களும் தம்முள் அளவொத்து இருப்பது பிரகிருதி எனப்படும். பிரளய காலத்தில் பிரகிருதி பரமாத்மாவிடம் சென்று அடங்கி விடும். இதுதான் பிரகிருத பிரளயம் என்று சொல்லப்படும். மூன்றாவது பிரளயம், அத்யதிக பிரளயம் எனப்படும். ஆதி ஆத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபெளதிகம் என்று சொல்லப்படும் மூன்று வகைத் துன்பங்களும் மறைந்துவிடும் சூழ்நிலை ஏற்படும். ஆதி ஆத்மிகம் என்பது உடம்பைப் பற்றிய நோய்களாகும். ஆதிதைவிகம் என்பது குளிர்ச்சி, சூடு என்பவற்றால் ஏற்படுவதாகும்; ஆதி பெளதிகம் என்பது பிற உயிர்களால் வரும் துன்பங்கள். அதி அந்திகா என்ற மூன்றாவது பிரளயத்தில் மேலே சொல்லப்பட்ட அனைத்தும் போய்விடும். விஷ்ணு புராணத்தின் இறுதிப் பகுதி புராணம் யாரிடம் தோன்றி, யார் யார் மூலமாக யார் யாருக்குக் கிடைத்தது என்று ஒரு பெரிய பட்டியல் போட்டுக் காட்டி, பிரம்மனிடத்தில் தொடங்கி மைத்ரேய முனிவர் வரை வந்த வரலாற்றைச் சொல்கிறது. (விஷ்ணு புராணத்தில் காணப்பெறும் மிக முக்கியமான செய்தி ஒன்று இங்கே குறிக்கப்பட வேண்டும். மற்ற புராணங்கள் நான்கு வர்ணத்தைப் பற்றிப் பேசி, சூத்திரர்கள்