பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பதினெண் புராணங்கள் கணேசர் தோற்றம் பார்வதிக்குத் தனியாக ஒர் அரண்மனை இருந்தது. அவ்வரண்மனைக் காவலர்களாக நந்தியும், பிருங்கியும் காவல் செய்தனர். அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் பார்வதியைப் பார்க்க முடியாத நிலைமை நீடித்தது. பார்வதியின் தோழிகளான ஜெய, விஜயா என்பவர்களுக்கு இந்த நிலை நீடிப்பதில் விருப்பமில்லை. எனவே, பார்வதியிடம் சென்று முறையிட்டனர். அவர்கள் பேசிய பிறகு பார்வதி அருகில் இருந்த குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து, அழகிய பிள்ளை வடிவை உண்டாக்கினாள். பிறகு அப் பிள்ளைக்கு நன்றாக அலங்காரம் செய்து, “நீ என் மகன்; உனக்கு கணேசன் என்று பெயர் வைக்கிறேன். இன்றுமுதல் நீ என் மெய்க்காவலன்” என்று கூறினாள். அப் பிள்ளை ஒரு தடிக்கம்பை எடுத்துக் கொண்டு காவல் தொழிலை ஆரம்பித்தான். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சிவன் வந்த பொழுதும் தடுத்து நிறுத்தி விட்டான். சிவபிரான் நான்தான் சிவபிரான் என்று கூறியும், அப்படி யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டான். சிவபிரான் எவ்வளவு சொல்லியும் அவன் கேளாமையால் அவனை மீறிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றார். கணேசன் அவரை விட மறுத்துத் தடியால் அடித்துத் துன்புறுத்தினான். உதவிக்கு வந்த நந்தி முதலானவர்களையும் தண்டித்தான். பின்னர் வந்த பிரம்மா, விஷ்ணு ஆகியவர்களையும் அவன் விடவில்லை. ஒரு பெரும் போரே மூண்டுவிட்டது. பிரம்மா முதலியவர்கள் பயன்படுத்திய எந்த ஆயுதமும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் விஷ்ணு ஒரு சூழ்ச்சி செய்தார். தந்திரத்தால்தான் இவனை வெல்ல முடியும். ஆகவே நாங்கள் முன் பக்கம் சண்டை செய்யும் பொழுது பின்புறமாக வந்து இவனை அடக்கினால்தான் உண்டு என்று விஷ்ணு தந்திரம்