பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 153 பொய் என்று ஆகிவிடும். உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். - அவர் கூறியதற்கு மறுப்புக் கூற முடியாமையால் சிவன் அவர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். காசிய முனிவனின் மகன் விசுவருபனின் பெண்களாகிய சித்தி, புத்தி என்ற இருவரையும் கணேசருக்கு மணம் செய்வித்தனர். சித்திக்கு 'லக்ஷா என்ற மகனும், புத்திக்கு 'லபா என்ற பிள்ளையும் பிறந்தனர். - - உலகைச் சுற்றச் சென்ற கார்த்திகேயன் அப்பணியை முடித்துக் கொண்டு தாய் தந்தையரிடம் வந்து சேர்ந்தார். ஏற்கெனவே கணேசருக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகளும் பிறந்திருப்பதைப் பார்த்து பெற்றோருடன் தங்குவதில்லை என்று சொல்லிவிட்டு கிரெளஞ்ச மலைக்குச் சென்று தங்கிவிட்டார். இனித் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்துவிட்டார். சிவனும் பார்வதியும், தனியே இருக்கும்,மைந்தனைக் காண முறையே அமாவாசை அன்று ஒருவரும், பெளர்ணமி அன்று ஒருவருமாக கிரெளஞ்சலை சென்று பார்த்து வருகின்றனர். இதனால்தான் வட்நாட்டில்' உள்ள கார்த்திகேயன் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. - • . லிங்க வடிவங்கள் பக்தர்கள் எங்கே கூடினாலும் அங்கே சிவன் லிங்க வடிவில் தோன்றுகிறார். ஆயிரக்கணக்கான இடங்களில் சிவன் இருந்தாலும் 12 முக்கியமான லிங்கங்கள் ஜோதிர் லிங்கங்கள்” என்ற பெயரில் போற்றப்படுகின்றன. அவை, சோமநாதம், மல்லிகார்ஜுனம், மகாகாளன், ஓம்காரம், கேதாரம், பீமசங்கரன், விசுவநாதன், திரியம்பகம், வைத்தியநாதன், நாகேசுவரன், இராமேஸ்வரம், குஷ்மேஷா ஆகியவை.