பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் . {55 அருமைக் கன்றே! அந்தக் கொடிய பார்ப்பான் உன்னை நன்றாக அடித்து விட்டான் என்று நீ வருந்த வேண்டாம். நான், இதற்குப் பழி வாங்கும் முறையில் இவனுடைய மகனை என் கொம்புகளால் குத்திக் கொன்று விடுகிறேன்” என்று கூறிற்று. இதைக் கேட்ட சுவடி எல்லையற்ற வியப்படைந்து, மறுநாள் என்ன நடக்கிறது என்று பார்க்க அங்கேயே தங்கி விட்டான். மறுநாள் விடியற்காலம் பார்ப்பானின் மகன் பால் கறக்க வந்தான். பசுமாடு தன் கொம்புகளால் அவனைக் குத்திக் கொலை செய்து விட்டது. சுவடி வியப்புடன் இதைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வெண்மை நிறமுடைய அப்பசு கருமை நிறமானது. பார்ப்பனனைக் கொன்றதால் 'பிரம்மஹத்தி தோஷம் பசுமாட்டைப் பற்றிக்கொண்டது. திடீரென்று அப்பசு வீட்டை விட்டுப் போகத் துவங்கியது. பார்த்துக் கொண்டிருந்த சுவடி அது எங்கே போகிறது என்று அறிந்து கொள்ள அதன் பின்னே போனான். நெடுந்துாரம் போன பசு, நர்மதை ஆற்றில் நந்தி தீர்த்தம் என்ற இடத்தில் இறங்கிக் குளித்தது. உடனே அதன் கறுமை நிறம் மாறி வெள்ளை நிறம் அடைந்தது. நந்தி தீர்த்தத்தில் மூழ்கினால் பிரம்மஹத்தி தோஷம்கூடப் போய்விடும் என்பதை அறிந்தான். தான் மட்டும் அங்கே குளித்து விட்டு வாரணாசிக்குப் புறப்பட்டான். அந்நிலையில், ஒர் அழகிய பெண் அவனெதிரே தோன்றினாள். "சுவடி! உன் தாயின் எலும்புகளை எடுத்துக் கொண்டு எங்கே போகிறாய்?” என்று கேட்டாள். தன் பெயரைச் சொல்லி அழைத்த அந்தப் பெண்ணைக் கண்டு வியப்படைந்த சுவடி, “நான் என் தாயின் எலும்புகளை கங்கையில் கரைக்கப் போகிறேன். நீ யார்?' என்று கேட்டான். அப்பெண் “நான் தான் கங்கை நீ கங்கை வரை செல்லத் தேவையில்லை. உன் தாயின் எலும்புகளை இந்த நந்திகேசுவரத் திலேயே கரைத்து விடு' என்று கூற, சுவடியும் அப்படியே